பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 177

நாம் இரண்டுபேரும் ஒன்றிப் படுத்துக்கிடப்பதற்கு ஒதுக்கான இடத்தைப் பார்க்கட்டுமோ சிங்கி பெரிய கொக்குகளாகப் பிடிப்பதற்குத் தக்க இடத்தைப்போய்ப் பாரடா சிங்கா. விந்தைக்காரியான உன்னைப் பேச்சிலே வெல்ல முடியாதடி சிங்கி அதில் சந்தேகமோ? உன் தலைப் பேனைக் கேளடா அது சொல்லுமே சிங்கா. இந்தத் தென்னாடெல்லாம் உன்னைத் தேடித் தேடி அலைந்தேனே சிங்கி. அப்புறம் இந்த நாட்டில் வந்து என்னை எப்படிக் கண்டுபிடித்தாய் சிங்கா? நன்னகருக்கு இறைவரான குற்றாலநாதரை வேண்டிக்கொண்டேன் சிங்கி, மணிகளை யுடைய பாம்புகளை ஆபரணமாகப் பூண்ட அவரைப் பாடிக் கொள்வோமடா சிங்கா. பாடிக் கொள்வது எவர்? ஆடிக்கொள்வது எவரடி சிங்கி? நீ பாடிக்கொண்டால் போதும்! நான் ஆடிக்கொள்வேனடா சிங்கா. அதனைப் பார்க்க இந்தப்பாவியேனுடைய ஆவி பொறுக்குமோடிசிங்கி! முன்னே ஆக்கப் பொறுத்துக் கொண்டிருந்தவர்கள் ஆறும்வரையும் பொறுத்திருக்க மாட்டார்களோ சிங்கா! இராகம் - புன்னாகவராளி தாளம் - ஆதி கண்ணிகள் வள்ளிக் கொடியிலே துத்திப்பூப்

பூப்பானேன் சிங்கி! காதில் வங்காளத் தாரிட்ட சிங்காரக்

கொப்படா சிங்கா! கள்ளிப்பூப் பூத்தது அதிசயம்

அல்லவோ சிங்கி! தெற்கு வள்ளியூ ரார்தந்த மாணிக்கத்

தண்டொட்டி சிங்கா! 2 வன்னக் குமிழிலே புள்னை

அரும்பேது சிங்கி மண்ணில் முந்நீர்ச் சலாபத்து முத்துமூக்

குத்திகாண் சிங்கா! 3