பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 181

யானை முகத்தினையுடைய ஒப்பற்ற கோமானையும், இனிமை செறிந்த இலஞ்சியிலே கோவில்கொண்டிருக்கும் முருகப் பெருமானையும் மைந்தர்கள் என்று பெற்றுள்ள இறையவனை, மைைறயவனை வாழ்த்துகின்றேன்!

வேள்வித் தீயினிடத்திலே பறிகொடுத்த அழகிய தலைக்கு ஈடாகத் தன் மாமனாகிய தக்கனுக்கு ஆட்டுத் தலையை ஒட்ட வைத்துச் சிறப்புச்செய்த நிலைபெற்ற பெரியோனாகிய இறைவனை வாழ்த்துகின்றேன்!

காமதேவனுக்கும், தாமரை வாசனாகிய பிரம தேவனுக்கும், தேவகன்னியாகிய தெய்வயானைக்கும் மாமன் என்று சொல்லப்படும் அருளாளனாகிய பெருமானை வாழ்த்துகின்றேன்!

நெடிய உலகம் அனைத்தையும் அளந்தவனாகிய நெடியவனாகிய திருமாலும், பிரமனும் தேடுவதற்கு அரியவன்ாகிய அந்தத் திரிகூடப் பெருமானை யான் வாழ்த்துகின்றேன்!

சித்திரா நதியினது கரையிலே கோவில் கொண் டிருப்பவனை, தேனருவி விழுகின்ற பெருக்கத்தினை யுடையவனை, சித்திர சபையிலே நடனம் இடுகின்றவனை, நிலைபெற்ற குற்றால நாதனை, நான் வாழ்த்துகின்றேன்!

பாம்பணிகளைப் பூண்டவனைப் பக்தர்களை ஆட் ' கொண்டருளியவனை, என்றும் தாண்டவமாடிக் கொண் டிருப்பவனை, அனைவருக்கும் ஆண்டவனாகிய பெருமானை வாழ்த்துகின்றேன். 4

அரி, அயன், அரன் ஆகிய மூன்று கடவுளர்களும் தானேயாகி என்றும் நீங்காது வீற்றிருக்கும் திரிகூட நாதனாகிய மேன்மையாளனைத் திகம்பரனை வாழ்த்து கின்றேன். திகம்பரன் நிர்வாண நிலையிலேயிருப்பவன்.

சிற்றாற்றங் கரையிலே கோவில் கொண்டிருப்பவனை, திரிகூட மலைக்கு உரிமையுடையவனைக், குற்றால நகரிடத்திலே வீற்றிருப்பவனைத் தட்சிணாமூர்த்தியாக விளங்கிய குருமூர்த்தியை வாழ்த்துகின்றேன்.