பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 183

நீடுலகெலாமளந்த

நெடியமாலும் அயனும் தேடரிய திரிகூடச்

செல்வனையான் வாழ்த்துகிறேன். 6 சித்ரநதி இடத்தானைத் -

தேனருவித் தடத்தானைச் சித்ரசபை நடத்தானைத்

திடத்தானை வாழ்த்துகிறேன். 7 பனகவணி பூண்டவனைப்

பத்தர்களை ஆண்டவனை அனவரத தாண்டவனை

ஆண்டவனை வாழ்த்துகிறேன். 8 அரிகூட அயனாகி

அரனாகி அகலாத திரிகூடப் பரம்பரனைத்

திகம்பரனை வாழ்த்துகிறேன். 9

|

சிற்றாற்றங் கரையானைத்

திரிகூட வரையானைக் குற்றாலத் துறைவானைக்

குருபரனை வாழ்த்துகிறேன். 10 கடகரியை உரித்தவனைக்

கலைமதியம் தரித்தவனை வடவருவித் துறையவனை

மறையவனை வாழ்த்துகிறேன். 11 ஆதிமறை சொன்னவனை

அனைத்துயிர்க்கும் முன்னவனை மாதுகுழல வாய்மொழிசேர்

மன்னவனை வாழ்த்துகிறேன். 12

(தந்தி - தந்தங்களையுடையது; களிறு, தீமுகம் - யாகத் யின் முன்பாக. திகம்பரன் - திக்குகளையே ஆடையாக