பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும் 2. ஞாயிறுபோல் மேவினாரே!

தன்னுடைய வாக்கின்படியே வடதிசையினின்றும் எழுந்து தென் திசை நோக்கிப் போந்த குறுமுனியாகிய அகத்தியருக்காக, மானைத் தாங்கிய தன் திருக்கையை அபயமாகக் காட்டியருளிய அருள் உள்ளத்தினை உடையவர் குற்றாலநாதர், சீர்மைகளின் தேக்கமாகச் செறிவுற்று எழுந்தவை நான்கு வேதங்களும்; அவை சிலம்புகளாக அவன் திருப்பாதங்களிலே அமைந்து கிடந்து ஒலி முழங்கும். அவன் ஏறிவருகின்ற விடையோ மலை போன்றதாகும். அதன்மீது ஏறியமர்ந்து, மேற்குத் திசையிலே தோன்றும் இளம்பிறையைத் தன் சடையிலே சூடியவனாகக் கிழக்குத் திசையிலே எழுந்து வரும். இளஞாயிறுபோல அவன் அதோ காட்சியளிக் கின்றான். மூக்குகளிலே எடுப்பாகத் தோன்றும் மூக்குத்திகளை அணிந்தவரான இளநங்கையர்கள். அணிவகுத்தாற்போல இரு மருங்கும் திரண்டு நிற்கின்ற, நன்மை பொருந்திய மூதுரான குற்றால நகரத்தின் வீதியிலே, அவன் இதோ எழுந்தருளி வருகின்றான். காண்பீர்! காண்பீர்! இப்படி அறிவித்துக் கொண்டே வருகின்றான் அந்தக் கட்டியக்காரன்.

விருத்தம் மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும்

நன்னகர மூதூர் வீதி வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந்த

கரங்காட்டும் வள்ள லார்சீர்த் தேக்கெழுந்த மறைநான்கும் சிலம்பெழுந்த

பாதர்விடைச் சிலம்பில் ஏறி மேக்கெழுந்த மதிசூடிக் கிழக்கெழுந்த

ஞாயிறுபோல் மேவி னாரே. (மூக்கெழுந்த முத்துடையார் - முத்து மூக்குத்தி அணிந்த வரான நங்கையர். அணி - வரிசை. வகுக்கும் - வகுத்து நிற்கும். 'வருக்கை பாடமாயின் குறும்பலாவினையுடைய நன்னகரம் என்க. நன்னகர மூதூர் வீதி - மூதூராகிய நன்னகரத்தின் வீதி, வாக்கு - திருவாக்கு கட்டளை. குறுமுனி - அகத்தியர். மறி -