பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 17

மானைப் பிடித்திருப்பது ஒரு கை, இப்படியாக இறைவனின் நான்கு கைகளும் விளங்கும். பாம்பாகிய ஆபரணம் துலக்க மாகத் தோன்றும் தான் அழித்த ஒரு புலியானது கொடுத்த ஆடையினையும், ஆனையானது கொடுத்த மேற்போர்வை யாகிய உரியினையும் அவன் உடுத்திருப்பவன். அழகிய இடையானது அசைய அவன் விடையூர்ந்து வருகின்றான். மலரிலே வாழும் அயனானவன் கொடுத்த மண்டை யோடாகிய உண்கலம் தன் கையிலே பொருந்தியிருக்க, அவன் இதோ பவனி வந்து கொண்டிருக்கின்றனன்!

தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரம்

தரித்த சுடர்மழு விரித்த தொருகரம் எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம் இலங்கப் பணியணி துலங்கவே அடுத்த ஒருபுலி கொடுத்த சோமனும்

ஆனை கொடுத்தவி தானச் சேலையும் உடுத்த திருமருங் கசைய மலரயன்

கொடுத்த பரிகலம் இசையவே. (பவனி) (சுடர்மழு - ஒளிவிடும் மழுவாயுதம், சிறுமறி - சிறுமான் மறி. பணியணி - பாம்பாபரணம். அடுத்த - கொன்று வென்ற, ஒரு புலி - ஒப்பற்ற வன்மையுடைய புலி. சோமன் - உடை விதானச் சேலை - மேலாடை, புலித்தோல் உடையும், யானைத் தோல் போர்வையும் ஆம். இவை நான்கும் தாருகாவனத்து முனிவர் ஏவச் சிவபிரான் அடக்கிப் பெற்றது என்பர். திருமருங்கு - அழகிய சிற்றிடை பரிகலம் - உண்கலம். அயன் கொடுத்த பரிகலம் - அவனுடைய மண்டையோடு, இசைதல் - விளங்குதல்)

(3) தம்மைத் தொடர்ந்து வரும் ஒப்பற்ற பெருச் சாளியின் மீது ஏறியவர் மூத்த பிள்ளையாராகிய திருமகன்; அவர் ஜெயப்படை தாங்கி அவனுடன் வருகின்றார். வன்மை பொருந்திய மயில் வாகனத்தையுடைய இளவரச குமரப் பெருமான்; அவர் வெற்றி வேலினைத் தாங்கி உடன் வருகின்றார். அகன்ற மார்பினிடத்தே கொன்றை மாலை யானது விளங்குகின்றது. அது விளங்குதலால், அதனோடு மணிப்பதக்கத்தின் ஒளியும் அவன் மார்பிடத்தே கலந்து