பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

தனதன் இந்திரன் வருணன் முதலிய

சகல தேவரும் வழுத்தவே. (பவனி)

(கனகம் - பொன். கனக தம்புரு - பொன் அழுத்திய தம்புரு. அனகம் - அநேகம் என்பதன் திரிபு. குஞ்சம் - குஞ்சங்கள். தனதன் - குபேரன்)

(6) சைவர்கள் மேன்மை நிலையினைப் பெற்றனர்; சமணர்கள் கீழான நிலையினைப் பெற்றனர். சகல சமயங்களும் இவ்வுண்மையை ஏற்குமாறு அவர் எழுந்தருளிப் பவனி வருகின்றனர். தம் கையிலே வலிய சக்கரப்படையினைத் தாங்கிய கருணைக்கடலான திருமாலோடு, கமலத்தோனாகிய பிரமனும் அவரது இருபுறமும் காத்து உடன் வருகின்றனர். “ஐம்பெருங் கடவுளர்க்கும் தலைவன் வந்தனன்! அமரர் களுக்கு எல்லாம் முதல்வன் வந்தனன் தெய்வங்கட்கெல்லாம் நாயகன் வந்தனன்' என்று கூறித் திருச்சின்னங்கள் அடுத்தடுத்து முழங்கிக் கொண்டிருக்கின்றன.இங்ங்ணமாக, நம் இறையவர் பவனி வந்து கொண்டிருக்கின்றனர்.

சைவர் மேலிடச் சமணர் கீழிடச் சகல சமயமும் ஏற்கவே கைவ லாழியங் கருணை மாலொடு

கமலத் தோன்புடை காக்கவே ஐவர் நாயகன் வந்த னன்.பல அமரர்நாயகன் வந்தனன் தெய்வ நாயகன் வந்த னன்னெனச்

சின்னம் எடுத்தெடுத் தார்ப்பவே. (பவனி)

(வலாழி - வல்லமையுடைய சக்கரப் படை. புடை - பக்கம், கமலத்தோன் - அயன். ஐவர் - பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய பஞ்சகர்த்தர்கள் என்னும் ஐம்பெருங்கடவுளர்கள்; அவர்கட்கும் முதல்வன் சிவபிரான் என்க.)

(7) படை வீரர் பெருக்கமும், படையணிகளின் பெருக்கமும், தேர்களின் பெருக்கமும், கொடிப்படைகளின்