பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

நிகழ்கின்றன. சக்தி, பைரவி, கெளரி ஆகிய திருப்பெயர்களை யுடைய குழல்வாய் மொழி அம்மையானவள் பெருமானின் இடப்பாகத்திலே அமர்ந்திருக்கின்றனள். இங்ங்னமாக, நம் இறையவர், இதோ வீதி உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

கொத்து மலர்க்குழல் தெய்வ மங்கையர் குரவை பரவையை நெருக்கவே ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள்

உலகம் ஏழையும் உருக்கவே மத்த ளம்புயல் போன்முழங்கிட மயிலனார் நடம்பெருக்கவே சக்தி பயிரவி கெளரி குழல்மொழித்

தைய லாளிடம் இருக்கவே. (பவனி) (குரவை - குரவை ஒலி. பரவை - கடல். ஒத்த திருச்செவி இருவர் - கனக கம்பளர் ஆகிய கந்தர்வர். தும்புரு நாரதர் எனவும்; ஆகா ஊகூ என்பவர் எனவும் கூறுவர்; புயல் - இடியைக் குறிக்கும். மயிலனார் - மயிலனைய சாயலுடையரான இளைய மாதர்கள். நடம் - திருநடனம். இறைவனின் திருவிளையாடல்களைக் குறித்ததாக இவை அமையும். சக்தி, பயிரவி, கெளரி - சக்தியின் பல அம்சங்கள்.) -

இந்த இசைப் பாடல் இறைவனின் கோலாகலமான பவனியின் வயணத்தை விரித்து விரித்து உரைத்துக் கட்டியக்காரன் சொல்லும் பாங்கிலே அமைந்தது. அதனால் அனைவரும் வந்து அவரைப் போற்றுங்கள். பணிந்து வாழ்வு பெறுங்கள் எனக் கூறி, முன்னதாகத் தான் வந்து எச்சரிக்கை முழக்குகின்றான் அவன்.

4. உலாக் காணவரும் பெண்கள்

பால் போன்ற வெண்ணிறம் உடையது. சிவபிரான் ஏறி ஊர்ந்துவருகின்ற அந்த இடபம். அதன்மேல் ஊர்ந்து வரும் திரிகூடப் பெருமானாரின் பவனியைக் காணக் கன்னி மார்கள் பலரும் திரள் திரளாக வந்து கொண்டிருக் கின்றனர். தென்றற் காற்றிலே ஏறிவரும் காமதேவனுக்காகக் கைகளிலே படைதாங்கித் துணை வருகின்ற சேனையர்