பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 25

பெருமானின் பேரழகினால் தாமே மாலேறி மயங்கித் தன் நிலை தடுமாறி விடுகின்றனர். அவர்களுடைய மயக்க நிலையினைக் காட்டுவன அடுத்து வரும் சில கண்ணிகள்.)

ஒரு கையிலே வளையலை அணிந்துகொண்ட பெண்கள், தம் அடுத்த கையிலேயும் வளையலைப் பூண மறந்தவராக அவனைக் காணுவதற்கு ஒடுவார்கள். அவர்களின் நிலை தடுமாற்றத்தினைக் கண்டு நகைப்பார்கள் சிலர். அவர்களருகே சென்றதும் அப்பெண்கள் வெட்கித் தலைகவிழ்ந்து நிற்பார்கள். இரு தனங்களுக்கும் மேலாக அணியும் இரவிக்கை யினைத் தம் மயக்கத்தினால் அரையிலுடுக்கும் உடையெனக் கருதி உடுக்க முயல்வார்கள் அவர்கள். பின்னர், அரையிலே அணியும் உடையினை ரவிக்கையென மயங்கிச் சாந்தம் பூசிய தம் முலைகளுக்கு மேலே இடுவார்கள் அப்பெண்கள்.

ஒருகைவளை பூண்ட பெண்கள் ஒருகைவளை பூணமறந்து

ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார். 5 இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின் இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார் 6

எதனையும் கருதி உணர்கின்ற மனமானது அவரை விட்டுப்புறத்தே உலாவரும் நாதனை நோக்கிப்போய்விட, ஒரு கண்ணுக்கு மை எழுத எடுத்த கையினராகவும், ஒரு கண்ணிலே மை இட்டவராகவும் தம்மை மறந்து ஓடி வருவார்கள் சில பெண்கள். நம் உள்ளம் கவர்ந்த மன்னவன் இவன். நல்ல நம் நகரத்துத் தெருவினிலே இவன் நெடுநேரம் நிற்கமாட்டானோ! எம்மை வருத்தும் மதனனை இன்னமும் அவன் வெல்ல மாட்டானோ? என்று துடிதுடிப்பார் சில பெண்கள்.

கருதுமணம் புறம் போக ஒரு கண்ணுக்கு மையெடுத்த

கையுமாய் ஒரு கணிட்ட மையுமாய் வருவார். 7 நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம் நில்லானோ மதனை இன்னம் வெல்லானோ என்பார். 8

(கண்ணிட்ட - ஒரு கண்ணிட்ட மதனை இன்னும் வெல்லானோ? ஒரு வசனஞ் சொல்லானோ? பாட பேதங்கள்.)