பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

கொல்' என்று குறளும் கூறும். பொன் அணித் திலகம் - பொன் அணியாகிய நெற்றிச் சுட்டியுடன் விளங்கும் பொட்டுமாம்)

2. அவள் வரும் அழகு! (கண்ணிகள்) பொன்னாலாகிய ஆபரணங்கள் பலவற்றையும் பூட்டிக் கொண்டாள். நெற்றிக்குத் திலகம் இட்டுக் கொண்டாள். மாரனையும் தன் கண் பார்வையினாலேயே மயங்கச் செய்பவள் போலத் தோன்றினாள். சிருங்காரத்துக்கு ஏற்ற அந்த மோகனப் பெண்ணாளான வசந்த வல்லியானவள் இப்படியாகத் தேவலோகத்து அரம்பையைப் போல வீதியிலே வந்து கொண்டிருந்தாள்.

தன்னை ஏறெடுத்துப் பார்ப்பவரின் கண்களுக்குத் தன் இரண்டு கண்களுமே ஏற்ற பதிலைக் குறிப்பாலேயே சொல்லத் திரிசுடக் கண்ணுதலைத் தன் பார்வையினாலே வென்று வசப்படுத்தப் பெண்ணுக்குப் பெண்ணும் மயக்கங் கொள்ளும் படியான பேரெழிலுடன், வசந்தவல்லியானவள், அன்னத்தின் பேடையைப் போலே, மெல்ல மெல்ல நடை பயின்று வெளியே வந்து கொண்டிருந்தாள். - இராகம் - கல்யாணி தாளம் - ஆதி

வங்காரப் பூஷணம் பூட்டித் - திலகந்தீட்டி

மாரனைக்கண் ணாலே மருட்டிச் சிங்கார மோகனப் பெண்ணாள் - வசந்தவல்லி

தேவரம்பை போலவே வந்தாள். 1 கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் - திரிகூடக்

கண்ணுதலைப் பார்வையால் வெல்லப் பெண்ணுக்குப் பெண்மயங்கவே - வசந்தவல்லி

பேடையன்னம் போலவே வந்தாள். 2 (வங்காரம் - பொன். பூஷணம் - ஆபரணம். மருட்டி - மயக்கி. சிருங்காரம் - சிற்றின்பம்; அழகுமாம். மோகனம் - மயக்கும் எழில். 'கண்ணுக்குக் கண் இணைசொல்ல அவள் ஒரு கண்ணுக்கு இவளுடைய மற்றொரு கண்ணே இணையாகுமேயன்றி வேறொருவர் கண்ணும் இணையாகாது என்று சொல்லும்