பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 29

படியாக என்றும் சொல்லலாம். பெண்ணுக்குப் பெண் மயங்குதல் - பெண்ணும் மிக விரும்பிக் காமுறும் பேரழகினள் அவள் எனக் காட்டுவதாகும். பேடையன்னம் - அன்னத்தின் பேடு; நடையழகிற்குச் சிறப்புடையது அன்னப்பேட்டின் நடை)

கைகளிலே தன் ஆர்வம் தீரும் அளவுக்குச் சூடகங்களை இட்டுக் கொண்டாள். தன் போன்றவரான, பிற இள மங்கையர்களை எல்லாம் வெற்றி கொள்ளும் பொருட்டுத் தன் கண்ணிலே, தான் ஏதுமறியாதவள் போலேயொரு நாடகத் தையும் இட்டுக் கொண்டாள். ஒய்யாரமாக நடை நடந்து, இந்த வசந்தவல்லியானவள், ஓர் ஒவியத்தைப் போலே தானும் வீதியிலே வந்து தோன்றினாள். .

சல்லாபத்துக்குரிய, தன் மனைவியான குழல்வாய் மொழி அம்மையுடன் இன்புற்று மகிழ்கின்றவர் குற்றால நாதர். அவர் உலாவந்து கொண்டிருக்கும் நீண்ட சங்கவீதியிலே உல்லாசம் பொருந்திய நடனமாதான இரதிதேவியைப் போல விளங்கும் வசந்தவல்லியானவள், ஊர்வசியும் தன்னைக்கண்டு வெட்க முறுமாறு ஒயிலுடன் நடந்து வந்தாள்.

கையாரச் சூடகம் இட்டு - மின்னாரை வெல்லக்

கண்ணிலொரு நாடகம் இட்டு ஒய்யாரமாக நடந்து - வசந்தவல்லி

ஓவியத்தைப் போலவே வந்தாள். 3 சல்லாப மாது லிலர் - குற்றால நாதர்

சங்கநெடு வீதிதனிலே உல்லாச மாது ரதிபோல் - வசந்தவல்லி

உருவசியும் நாணவே வந்தாள். 4 (சூடகம் - பெண்கள் கையணிகளுள் ஒன்று, வளை போல்வது; எனினும் அதனினும் வேறான அமைப்பும் உடையது. கண்ணில் நாடகமிடல் - கண் அசைவின் மூலம் பல வகையான கருத்துகளை உணரக் காட்டுதல். சல்லாபம் - சரச சல்லாபம். லீலர் - லீலைகளைப் புரிபவர். சங்கம் - கூட்டம். அரம்பை, ஊர்வசி - தேவலோகத்து நடன மாதர்)