பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

3. வசந்தவல்லியின் அழகு (கண்ணிகள்)

(1) இருண்ட மேகங்கள் தம்முள் சுற்றிச் சுருண்டு சுழி கொண்டு எறிந்தாற்போல விளங்கும் சுருண்ட மயிரடர்ந்த கொண்டையினாள் அவள். காதளவு ஒடிக், காணும் ஆடவர்களது நெஞ்சையெல்லாம் சூறையாடும் கயல்மீன் விழியினாள் அவள். திருத்தமான அழகினையுடைய முருக்கம் பூவினது அரும்பினைப் போலச் செக்கச் சிவந்திருக்கும் இதழ்களை உடையவள் அவள் அழகிய வில்லைப் போல வளைந்து, இளம்பிறையின் வடிவினைப் போல விளங்கி, ஒளியுடன் திகழுகின்ற நெற்றியினையும் உடையவள் அவள்.

(2) அரம்பையின் தேசமாகிய வானுலகத்து வில்லாகிய வானவில்லும், இவள் புருவத்தின் அழகைப் பெறல் வேண்டும் என விருப்பமுற்று ஆசையாகச் சொல்லுமளவுக்கு, அழகாகத் தோன்றும் புருவங்களையுடையவள் அவள் கருப்பஞ்சாறு போல இனித்தும், அமுதம்போல வாழ்வு தந்தும் விளங்கும் சொல்லினை உடையவளும் அவள், ஆரவாரிக்கும் கடல லைகள் கொணர்ந்து குவித்த முத்துக்களை, நிரையாகப்பதித்து வைத்தாற்போன்ற பல்வரிசையினையும் உடையவள் அவள்.

இராகம் - பைரவி தாளம் - சாப்பு கண்ணிகள் இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு

சுழி எறியும் கொண்டையாள் குழை

ஏறி யாடி நெஞ்சைச் சூறையாடும்

விழிக் கெண்டையாள்.

திருந்து பூமுருக்கின் அரும்புபோ

லிருக்கும் இதழினாள் வரிச் சிலையைப் போல்வளைந்து பிறையைப்போல்

இலங்கும் நுதலினாள். 1 . அரம்பை தேசவில்லும் விரும்பி

ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர்