பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 31

அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும்

மங்கைப் பருவத்தாள். கரும்பு போலினித்து மருந்துபோல்

வடித்த சொல்லினாள் கடல் கத்துந் திரைகொழித்த முத்து

நிரை பதித்த பல்லினாள். 2 (இருண்ட மேகம் - மழைக் காலத்து மேகம்; அவள் கூந்தல் சுருண்டு கருமையாகத் திகழ்ந்தது என்பது கருத்து. குழை - காதணி, இங்கே காதைக் குறித்தது. சூறையாடல் - கொள்ளை யடித்தல். வரிச்சிலை - அழகிய வில். அரம்பை தேசம் - வானுலகம். கருவம் இருக்கும் பருவம் - பிறரை மயக்கி வெல்வோம் என்ற கர்வம் குடிகொண்டிருக்கும் பூரித்த எழிற் பருவம். மருந்து - அமுதம். கத்தும் - ஒலிக்கும்.

(3) பல்வரிசையின் அழகினை எட்டி எட்டிப் பார்ப்பது போலே மூக்கிலே விளங்கும் ஒப்பற்ற முத்துப் புல்லாக் கினையும் உடையவள் அவள். திங்களும் பழகுவதற்குரிய ஒளியுடைய வடிவ நிலைபெற்று, அழகு குடிகொண் டிருக்கும் முகத்தினையும் உடையவள். ஒளி பொருந்திய பல வகையான அணிகளை எல்லாம் புனைந்து, அதனால் கொடி படர்ந்திருக்கும் கழுகையும் வெற்றி கொண்ட கழுத்தினை யுடையவள். உலகனைத்தையும் தனக்குரிய விலையாக இட்டு எழுதி அத்துடன் இன்பநிலை இதுவே எனவும் எழுதியது போன்ற தொய்யிலாகிய எழுத்தினையும் உடையவள்.

(4) மணிகள் பதித்த தங்கத்தாற் செய்த அழகிய கடகங்கள் இட்டு விளங்கும் சிவந்த கைகளையும் உடையவள். எவ்விடத்தும் கச்சுக்குள் அடங்கிக் கிடப்பனவாயினும் காணக் காணத் தித்தித்துக் கிடக்கும் இரு கொங்கைகளையும் உடையவள். இறைவனடிகளிலேயே ஒன்றிக் கிடக்கும் கருத்தினரான தவசிகளின் கல்லான மனமும் சுழலும்படியாகச் செய்யும் அழகிய உந்திச் சுழியினையும் உடையவள். அந்த உந்திச் சுழிக்கும் மேலாக, ஒழுங்கு கொண்டு ஆடவரின் உள்ளத்தை விழுங்கும் சிறிய ரோம பந்தியினையும் உடையவள் அவள்.