பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் , 33

அடங்கிவிடுகின்ற அவ்வளவு சின்ன இடையினள். காமன், இளைஞர் உள்ளங்களை நிலையழியச் செய்து இன்புறுகின்ற ஒரு துட்டன். அவனுடைய அரண்மனை வாயிலுக்குக் கட்டி வைத்துள்ள கதலி வாழைகளைப்போல விளங்கும் அழகிய தொடைகளையும் உடையவள் அவள். அடுக்கடுக்காகப் பல வண்ணங்களையுடைய சேலையினைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நெறிப்படுத்திக் கொய்து, அழகாக உடுத்துக் கொண்டிருப்பவள் அவள் அன்னப் பேட்டின் நடையினுங் காட்டில் மெல்லென நடை பயின்று வரும் மென்மையான நடையினளும் அவள்.

(6) அலைகளின் ஆரவாரத்தையுடைய கடலினிடத்தே தோன்றிய அமுதத்தை எடுத்து, அப்படியே பெண்ணின் உருவாகச் சமைத்தது போல விளங்கும் அமுதத் திருமேனி யினையும் உடையவள் அவள். அடுதல் தொழிலிலே வீமனுடைய பாகமே சிறந்தது என்பார்கள்; அத்தகையோ னால் பாகம் செய்யப் பெற்றது போலப் பக்குவமுடன் காய்ச்சப்பட்டுள்ள காமப்பாலுக்கு, மேலும் மேலும் சுவையூட்டுவதற்கு ஏற்புடைய சீனியினைப் போன்றவள் அவள். நறுமணம் கொண்டுள்ள வல்லிக் கொடியினைப் போல விளங்கும் வசந்தவல்லி என்பவளினுடைய அழகின் பெருக்கமானது, அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றாகிய திருக்குற்றாலத்திலே எழுந்தருளியிருப்பவரான திரிகூட ராசரையும்கூடத், தம் சித்தம் உருகச்செய்யும் வண்ணம் மேற்கண்டவாறு விளங்கிற்று.

துடிக்குள் அடங்கியொரு பிடிக்குள்

அடங்குஞ்சின்ன இடையினாள் காமத் துட்டன் அரண்மனைக்குக் கட்டும்

கதலிவாழைத் தொடையினாள். அடுக்கு வன்னச்சேலை எடுத்து

நெறிபிடித்த உடையினாள் - LDL— அன்ன நடையிலொரு சின்ன

நடைபயிலும் நடையினாள். 5