பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ

ரம்பையோ மோகினியோ ԼD6ԾT முந்திய தோவிழி முந்திய தோகர

முந்திய தோவெனவே உயர் சந்திர சூடர் குறும்பல வீசுரர்

சங்கணி வீதியிலே மணிப் பைந்தொடி நாரி வசந்த ஒய்

யாரிபொற் பந்து கொண்டாடினளே! 4

(வால்வளை - வெண்மையான சங்கு வளையல்கள். புனை பாடகம் - புனைதற்றொலினையுடைய பாடகம். சிறுபாதம் - பாதச்சிலம்பு; அன்றிப் பாதமெனவே கொள்ளவும் செய்யலாம். அப்போது பாடகமும் பாதமும் துள்ளித்துள்ளி நடனத்திலே அங்கொரு பாவனையினைக் கொண்டவைபோல ஆட' என்க. நாடகம் - நடனம். ஆடகவல்லி - ஆடிக் கொண்டிருக்கும் அழகிய பூங்கொடி போன்றவள். ஒய்யாரி ஒய்யாரத்தினை உடையவள். இந்திரை - இந்திராணியெனவும்; கந்தரி - திருமகள் எனவும் கொள்வர்; அதனினும் இதன்கண் கூறியதே சிறப்புடைத்தென்க. சந்திர சூடர் - சந்திரனைச் சடையிலே சூடியிருப்பவர்; சிவபெருமான். சங்கணி வீதி - கூட்டம் அணிவகுத்து நிற்கின்ற அவர் உலாவரும் சங்கவீதியாகிய திருவீதி, மணிப்பைந்தொடி - மணிகள் பதித்த பசிய வளைகளும் ஆம்; இக்காலத்துக் கல்லிழைத்த வளைகள்போல என்க.)

6. பந்தாடலின் சிறப்பு

பூங்கொத்துகள் அணிந்துள்ள அழகிய கூந்தலானது அவிழ்ந்து தொங்கியது. அப்படித் தொங்கிய வண்ணமாக அவள் முன்னால் அடியிட்டும், பின்னால் அடியிட்டும், இடையிலே மூன்றடிநாலடியிட்டு நடந்து சென்றும், விரைந்து மாதர்கள் கூட்டத்திலே ஒரு கலகலப்பு ஏற்பட, இடசாரி வலசாரியாகச் சுற்றிச்சுற்றி வந்தவளாகத், தன் சகிமார்கள் சூழப், பந்தடித்துக் கொண்டிருந்தனள். கொடிய காமனின் படையான அவள், அங்ங்னம் இளைஞரை வெல்லப் போரிடலிலே ஈடுபட்டிருந்த பாவனையைப் பார்த்த