பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 41

கின்ற சித்தரான திரிகூடநாதரை, அவளும், தனக்கு எதிராகப் பவனி வரக் கண்டனள்.

வருசங்க வீதி தன்னில் வசந்தபூங் கோதை காலில் இருபந்து குதிகொண் டாட இருபந்து முலைகொண்டாட ஒருபந்து கைகொண் டாடஒரு செப்பில் ஐந்து பந்தும் தெரிகொண்டு வித்தை யாடும் சித்தரை எதிர்கண்டாளே.

(பந்து என உருட்சிபற்றி உவமித்தனர் என்க. அனைத் தையும் உள்நின்று இயக்குபவனும் ஈசனே! அதனால் அவளை அவ்வாறு ஆடிவரச் செய்து வித்தை ஆடும் சித்தன் அவன்; என்கிறார். அன்றிப் பஞ்சபூதங்களையும் ஊழி முடிவிலே மாயையுள் ஒடுக்கி விளையாடுபவன் அவன் என்றும் பொருள் கொள்ளலாம். -

9. கண்டாள்! வியந்தாள்! “சித்து வேலையில் வல்லவர் இவர்தாம் யாவரோ? வெகு வேடிக்கைக்காரராக, எருதின் மேலே ஏறி வருகின்றாரே? இவர் யாவரோ?

“மார்பினிலே நாகாபரணத்தைப் பூண்டுள்ளார். நஞ்சுக் கறையைக் கழுத்திலே கொண்டுள்ளார். காகங்கூட அணுக வராதபடி எப்புறத்தும் காடு கட்டிக்கொண்டு, தம் இடப் பாகத்திலே, பச்சைக் கிளிபோல ஒரு பெண்ணையும் வைத்திருக்கின்றார். அதனாலும் தீராத மோகம் தீரப் பெறுவதற்கு போலும், மற்றொரு பெண்ணைத் தன் சடை முடியிலும் வைத்திருக்கின்றார்? இவர்தாம் யாவரோ?

"திருமேனியிலே சிவப்பு வண்ணத்தின் அழகு இருக் கின்றது. திருக்கையிலே மழுவாயுதத்தின் அழகும் விளங்கு கின்றது. மைதீற்றிக் காண்பாராயின் மயக்கங் கொள்ள மாட்டார்களோ? சிவந்த சடையின் மேலேயோ திங்கட் கொழுந்தான ஒரு பிறை இருக்கவும், அது நடுங்குமே எனக் கூடப் பாராமல் அவர் அணிந்துள்ள பாம்பு அடிக்கடி படத்தை விரித்துக் கொண்டிருக்கின்றதே? அம்மாவோ?

“அருட்கண்ணின் பார்வையினால் என் மேனியெல்லாம் தங்க நிறங்கொள்ளும்படியாக, அவர் என்னை உருக்கிப்