பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

இதனை நான் முன்னமேயே அறியேனே? மேனி முழுவதும் பசந்துபோய் விட்டேனே? பெற்ற தாயின் சொல்லையும் இன்று கசப்பாகக் கருதினேனே? அவன்பாற் கொண்ட தாகமன்றி வேறெதுவும் பூணேனே? என் கைகளிலே அணிந்து வந்த வளைகளையும் அங்கே இருக்கக் காணேனே? ஐயோ! என்ன செய்வேன்? இப்படி அவள் காதலுற்றுத் தன் நிலைகுலைந்து நின்று புலம்பினாள். இராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம் கண்ணிகள் முனிபரவும் இனியானோ - வேத

முழுப்பலவின் கனிதானோ கனியில் வைத்த செந்தேனோ - பெண்கள்

கருத்துருக்க வந்தானோ? o, தினகரன்போற் சிவப்பழகும் - அவன்

திருமிடற்றிற் கறுப்பழகும் பனகமணி இருகாதும் - கண்டால்

பாவையுந்தான் உருகாதோ? 1 வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு மயக்கமதாய் வருகுதையோ மோகமென்பதிதுதானோ - இதை முன்னமேநான் அறிவேனோ? ஆகமெல்லாம் பசந்தேனே - பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே தாகமின்றிப் பூனேனே - கையில்

சரிவளையும் காணேனே? 2 (முனி - அகத்திய முனி. வேதப்பலவின் முழுக்கனி - வேதங்கள் அனைத்தின் பொருளாகவும் அமைந்த இறையவன். கனியின் செந்தேன் - அவன் அடியவர்களுக்காக உருவத் திருமேனி காட்டி வருவது வேதசாரம். தினகரன் - உதய சூரியன். கறுப்பு - நச்சுக் கறை. பனகம் - பாம்பு. வாகனம் - வாகான உடலினன்; அழகன். மயக்கம் - காம மயக்கம். வேத, பெண்கள்