பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 45

அவன் கண்டால் ஒரு, இதை பெற்ற கையில், இச்சொற்கள் முன் வெளிவந்த சில பிரதிகளில் இல்லை.)

12. தோழியரின் புலம்பல் இவள் நடையழகினைக் கண்டால் அன்னமும் தோற்றுப் போகுமே! நம் நன்னகரிலேயுள்ள வசந்தவல்லியான இவளோ, ஏற்றுர்தி கொண்டவனின் எதிரே போய்த் தெருவிலே கூட்டமிட்டுள்ள பலருமறியத் தன் சங்கு வளைகளைத் தோற்று நிற்கின்றாளே? சடை கொண்டானின் உடையாகிய திகம்பரக் கோலத்தைத் தான் ஏற்றுக்கொண்டு, அவனுக்குத் தன்னுடைய உள்ளத்தையும் பறிகொடுத்து நிற்கின்றாளே? நம் ஐயனான அவன், இவள் உடை கவர்ந்த வழுக்கினால்தானோ, இவள் அவன் செல்கின்ற தேராகிய நிலத்தினைத் தனக்கும் புகலிடமாகக் கொண்டனள்? (அவள் மயங்கித் தெருவிலே விழத் தோழியர் இப்படிக் கூறினர்) விருத்தம் நடைகண்டால் அன்னம் தோற்கும்

நன்னகர் வசந்தவல்லி விடைகொண்டான் எதிர்போய்ச் சங்க

வீதியிற் சங்கம் தோற்றாள் சடைகொண்டான் உடைதான் கொண்டு தன்னுடை கொடுத்தாள் ஐயன் உடைகொண்ட வழக்குத்தானோ

ஊர்கின்ற தேர்கொண் டாளே. ('சங்கம் தோற்றாள் - ஆடையும் தோற்ற போது நாணத்தால் தன்னை மறைக்க நிலத்திலே மயங்கி வீழ்ந்தாள்' என்க. சடை கொண்டான் உடை - நிர்வாணம். பூமியை இறைவன், தேராகக் கொண்ட கதை புராணங்களுட் காணப்படும். 'காமத்தால் உடை நெகிழ நிற்றல் - இயல்பு)

13. தோழியளின் ஐயுறவு!

‘நமக்கு நேசமான குற்றாலநாதர் மீது ஆசை கொண்டதனால் மயங்கிப் பூமியில் இப்படி வீழ்ந்தாளே!’