பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 47

இவ்வாறு வாய்விட்டுப் புலம்பினார்கள். ஒவ்வொருவரும் அவளுடைய மயக்கத்தின் காரணமாக, ஒவ்வொன்றைக் கூறினர். இறுதியிலே அனைவருமாக 'திரிகூடனாதா! இவளைக் காப் பாற்றுவாயாக!' எனச் சிவனருளை வேண்டுகின்றனர்.)

14. வெதுப்பினார்கள்!

'வானவரான திருக்குற்றாலநாதரின் மீது கொண்ட மையலினாலேயே வசந்தவல்லியானவள் தன்னுடல் சோர்ந்து வீழ்ந்தனள் என்பதை அப் பாங்கியர் முடிவிலே அறிந்தனர். அறிந்த உடனே, அவளைத் தூக்கிக் கொண்டுபோய்த், தமனிய மாடத்திலே சேர்த்தனர். அரிய அழகுத் தோற்றத்தினை யுடையவரும் மின்னலைப் போன்ற ஒளி பொருந்திய சாயலினை உடையவருமான அப்பெண்கள், கிணற்றுள்ளே தவறி விழுந்தவர்களை எடுப்பதற்குக், கூனையைக் கிணற்றினுள் இறக்கிவிட்டாலும், அறியாமல், அதனால் மேலும் அவரை அந்த நீரினுள்ளேயே அமிழ்த்துகின்ற அறியாமையுடையவர்களைப் போலே, வசந்தவல்லியின் உடலின் வெப்பம் தணியுமாறு, குளிர்ச்சியான கலவைகளைப் பூசிப் பூசி, மேலும் அவளுடைய உடல் நோயை அதிகமாக்கிக் கொண்டே யிருந்தனர். - -

விருத்தம் வானவர் திருக்குற் றாலர்

மையலால் வசந்த வல்லி தானுடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடஞ் சேர்த்து மேனியார் அழகு தோற்ற

மின்னனார் விழுந்த பேரைக் கூனைகொண்டமிழ்த்து வார்போல் குளிர்ச்சியால் வெதுப்பு வாரே! (வானவர் - வானகத்தவர்; மேலானவர். தானுடல் தன்னுடைய மேனி. தமனியம் - பொன். மேனியார் அழகு - அழகு ஆர் மேனி எனக் கூட்டுக. கூனை - நீர் இறைக்கும் உலோகத்தாலான சால். குளிர்ச்சி - குளிர்ச்சிப் பொருள்கள்)