பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

15. தாபத்தின் வேகம்!

மணமிகுந்த சந்தனக் குழம்பினை அவளுடலிலே பூசுவார்கள். விரகத்தியை முட்டி மூட்டி மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்வது போல் விசிறி வீசிக் கொண் டிருப்பார்கள். 'இவள் உடலனைத்தும் கருகுகின்றதே! இவள் மேனி உருகுகின்றதே" என்றும் அங்கலாய்ப்பார்கள். "மேலே பாப்பிய பூக்கள் கருதுகின்றனவே! முத்துமாலையின் முத்து களும் பொரிகின்றனவே!” என்று சொல்லித் துடிப்பார்கள் சில பேர்.

அவளருகிலேயே அமர்ந்து கொண்டு, அவளுக்கு வெப்பந் தணிவிக்கும் அந்தக் கதைகளையே அவர்கள் மீண்டும் விடாது நடத்திக் கொண்டேயிருப்பார்கள். அவளை மெதுவாக அணைத்து எடுத்து, மெல்லிய வாழைக் குருத்திலே கிடத்துவார்கள். அவ்வேளையிலே, நன்மை பெருகும் குற்றால நகரத்துக் குறும்பலாவினடியிலே எழுந்தருளியிருப்பவரின் திருமுடியின் மீதுள்ள நிலவின் மீது, வசந்தவல்லியானவள் சினங்கொண்டு அதனைப் பழித்துப் புலம்பத் தொடங்கினாள்.

இராகம் - கல்யாணி தாளம் - சாப்பு கண்ணிகள் முருகு சந்தனக் குழம்பு பூசுவார் - விரகத்தீயை

மூட்டி மூட்டி விசிறி வீசுவார் குருகு தேயுட்ல் உருகுதே என்பார் - விரித்த பூவுங்

கரியு தேமுத்தம் பொரியுதே என்பார். 1

அருகில் இருந்து கதைகள் நடத்துவார் - எடுத்துமாதர்

அனைத்து வாழைக் குருத்தில் கிடத்துவார்

பெருகு நன்னகர்க் குறும்ப லாவினார் - வசந்த மோகினி

பெருநிலாவி னொடுக லாவினாள். 2

(முருகு - மணம். விரகம் - காமம். முத்தம் - முத்துமாலை. கதைகள் நடத்தல் செய்தவற்றையே மீண்டும் மீண்டும் செய்தல். உடல் வெப்பந்தீர வாழைக் குருத்திலே கிடத்தல் மரபு. அது நோக்கி அவளையும் அவ்வாறு எடுத்துக் கிடத்தினர் என்க. கலாவுதல் - கோபம் கொண்டு பேசுதல்.)