பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 51

(காந்தி ஆட்டம் - வெப்பம் விளைவித்து ஆடும் வெறியாட்டம். ஆகடியம் - அநியாயம். ஆட்கடியன் - மனிதனுக்கு அடிமையான மனிதன்; ஆள் அடிமை. எருவிட்டு எறிதல் - தைநீராடலின்போது சிறுமியர் நிலவை வேண்டி வணங்கித், தாம் மார்கழி நாள்தோறும் வாயிலில் பூவைத்துப், பின்தட்டி வைத்திருக்கும் எருக்களை நீரிலே எறிதல்.)

18. வேனிலானே!

தண்மையான நிலவினையே குடையாகக் கொண் டவரான குற்றாலநாதர் தந்த மையலின் விளைவே இது. இதனை அறிந்திருந்தும், என் தோழிப் பெண்கள் எண்ணற்ற பகைகளை எல்லாம் எடுத்துக் கொணர்ந்து அவற்றால் என்னைத் தெளிவிக்க முயலுகின்றனரே? இந்த நகரத்தையும் நல்ல நகரமென்று எவர்தாம் சொன்னார்களோ? அண்ண லார் திரிகூடநாதர்' என்று போற்றுவார்களே! அவர், என்னளவிலே எனக்கு அருள் செய்பவராக அமைந்திடவும் மாட்டாரோ? வெண்ணிலவினைக் குடையாகப் பிடித்துக் கொண்டு, மகரமீன் கொடிபிடித்து, இளந்தென்றலிலே ஊர்ந்து வருகின்ற மன்மதனே! நீயாவது சொல்வாயாக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தண்ணிலா மெளலிதந்த மையலா னதையறிந்தும் தைய லார்கள் எண்ணிலாப் பகையெடுத்தார் இந்நகரை நன்னகரென் றெவர்சொன் னாரோ அண்ணலார் திரிகூட நாதரென்ப

தென்னளவும் அமைந்தி டாரோ வெண்ணிலாக் குடைபிடித்து மீனகே தனம்பிடித்த வேனி லானே!

(தையலர்கள் எடுத்த பகை - செய்த உபசரணைகள். அதனால் அவள் வெப்பம் அதிகமானதால் அவற்றைப் பகை என்றனள். அண்ணலார்’ என்ற பேருக்குரிய அருள் அற்றவராயினர் போலும் என்று புலம்புகிறாள் அவள்)