பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

நித்திரை தானொரு

சத்துரு வாச்சுதே மன்மதா! பேரிகையே அன்றிப் பூரிகை

ஏன் பிள்ளாய் மன்மதா - சிறு பெண்பிள்ளை மேற்பொரு

தாண்பிள்ளை யாவையோ மன்மதா! 3 வார்சடை ஈதல்ல கார்குழற்

பின்னல்காண் மன்மதா - நெற்றி வந்தது கண்ணல்ல

சிந்துர ரேகைபார் மன்மதா! நாரிபங்காளர்தென் ஆரிய

நாட்டினர் மன்மதா - எங்கள் நன்னகர்க் குற்றாலர் -

முன்னமே செல்லுவாய் மன்மதா! 4 (பேரிகை - குற்றாலநாதர் உலாவிலே முழங்கிய முரசமும்; பூரிகை - குயிலாகிய எக்காளமும் ஆம். வார்சடை என்பது தொடங்கி மன்மதனைத் தன் காதலன்பாற் செல்லுமாறு வேண்டுகிறாள் வசந்தவல்லி, நேரிழையார் - நேரிய ஆபரணங்களை அணிந்தவர்; பெண்கள். வார்சடை - நீண்ட சடை)

20. பாங்கி வினாவுதல் கொடி போன்றவளே! இனிமை முதிர்ந்து ஒழுகிக் கொண்டிருக்கும் பூங்கொம்பினைப் போன்றவளே! கச்சினால் இறுக்கப்பெற்றும், வம்பாக அதனுடன் எப்போதும் மோதிக் கொண்டேயிருக்கும் மதர்த்த கொங்கைகளையுடைய பிடி போன்றவளே! எங்கள் குடிக்கு ஒரே பெண்ணாக வந்து பிறந்துள்ள பெண் பிள்ளையே! உலகம் ஏழினையும் உடையவர் திரிகூடநாதர். அவருடைய திரிகூட நகரிலே ஐம்படைகளுடன் வரும் மன்மதனைப் பயிற்று முகத்தால், நீ சொல்லிய சொற்களை, அடியேன் நின் தோழியாயிருக் கையிலே, அவற்றை நானும் தெரிந்து கொண்டால் ஆகாதோ? அதனை என்னிடமும் சொல்வாயாக.