பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 55

அறுசீர்க் கழிநெடிலடிஆசிரிய விருத்தம் படியே ழுடையார் திரிகூம்

படைமா மதனைப் பயிற்றியசொல் அடியேன் சகியா யிருக்கையிலே

அதுநான் பயின்றால் ஆகாதோ கொடியே மதுரம் பகுத்தொழுகு

கொம்பே வம்பு பொருதமுலைப் பிடியே எமது குடிக்கொருபெண்

பிள்ளாய் கருத்து விள்ளாயே. 1 (படி - உலகம். பயிற்றிய - கற்பித்த மதுரம் - இனிமை. வம்பு பெருகுதல் - கச்சை ஊடறுப்பது போலப் பூரித்தல்)

21. கேளாய் பாங்கி! சகியே! மெய்யடியார்களுக்கு மெய்யனாக விளங்கும் நம் திரிகட நாயகரின் மீதிலே நானும் மிகவும் மையல் கொண்டவளானேன். அந்தச் செய்தியை நீயும் கேட்பாயாக சிவந்த அவருடைய சடையும், அதன்கண் அவர் சூடியுள்ள அழகிய கொன்றை மாலையின் அழகும், அவர் கையிலே விளங்கும் மழுவும், என் கண்களைவிட்டுச் சற்றும் அகலா திருக்கின்றனவே?

கங்கையாகிய பெண்ணைத் தலையிலே வைத்துள்ள தெய்வங்களுக்குள் உயர்வான அந்தப் பொருளைக் கண்டேன். குளிர்ச்சியான திங்கட் கொழுந்தாகிய மூன்றாம் பிறை யினையும் என்னளவிலே தீக்கொழுந்தாக ஆக்கிக் கொண்டேன். சங்கக் குழைகள் அணிந்த அவரை, அடியார் கூட்டம் நிறைந்த சங்க வீதியிலே உலாவரக் கண்டேன். என் இரு செங்கைகளிலும் இருந்த சங்கு வளையல்களையும் இழந்து நான் மயங்கிவிட்டேனே! இராகம் - கல்யாணி தாளம் - சாப்பு

கண்ணிகள் மெய்யர்க்கு மெய்யர் திரிகூட நாயகர்மீதில் - மெத்த