பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

மையல்கொண்டேனந்தச் செய்தியைக்

கேளாய்நீ பாங்கி.

செய்ய சடையும் திருக்கொன்றை

மாலை அழகும் - அவர்

கையில் மழுவுமென் கண்ணைவிட்

டேஅக லாவே. 1

கங்கைக் கொழுந்தணி தெய்வக்

கொழுந்தை நான் கண்டு - குளிர் திங்கட் கொழுந்தையும் தீக்கொழுந்

தாக்கிக்கொண்டேனே. சங்கக் குழையாரைச் சங்க மறுகினிற்

கண்டு - இரு செங்கைக்குள் சங்கமும் சிந்தி

மறுகிவிட்டேனே! 2 ('மெய்யர்க்கு மெய்யர் ஆகவே, பொய்யர்க்கு அவனும் பொய்யனே யாவான் என்க. கொழுந்து - சிறப்புடையது; சுடர்). அழகிய இளம்பிறையினைச் சூடியவரான திருக்குற்றால நாதரைக் கண்டேன். அதனால், சிறு தென்றல் என்னும் குளவி தினமும் என்னைக் கொட்டிக் கொண்டே இருக்கிறதே! அதனால் மிகவும் நொந்து போய்விட்டேனே! மேருவை வில்லாக வளைத்துக் கைக்கொண்டவர் திருக்குற்றாலநாதர். அவர் முன்னர்ப் போயினேன், அதனால், மதனவேளானவள் தன் வெற்றி பொருந்திய கரும்புவில்லைக் கொண்டு என்மீது மெல்ல மெல்லப் போரிடத் தொங்கிவிட்டானே?

நம் பெருமானை நல்ல நம் நகரின் பெரிய ராஜவீதியிலே உலாவரக் கண்டேன். அவர் கையிலேந்தியிருக்கும் மானைக் கண்டதும் என் ஆடையையும் நெகிழ விட்டேன். செம்பவழ மேனியிடத்திலே சிறு கறுப்புக் கறையினையுடையவரை நான் உலாவரக் கண்டேன். அம்மவோ! இப்போது என்மேனி அடங்கலுமே அவர்மீது கொண்ட மோகத்தினால் கறுத்துப் போய்விட்டேனே!