பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்

டோதரியாள் மானே! - அவர் பொன்னடியிற் சேர்ந்தணைய என்னதவம்

செய்தாளோ மானே! 2

(மால்விடை - பெரிய ஆணேறு. வாகனம் - ஊர்தி. ஒக்க - ஒருமிக்க. பொன்னுலகம் - தேவருலகம். வாசல் - ஆசாரவாசல், கன்னியர் - தேவகன்னியர். பன்னியர் - தாருகாவனத்து ரிஷி களின் பத்தினிமார்கள். மண்டோதரி - இராவணனின் மனைவி) 24. ஒரு பெண் கண்டாய்!

குறும் பலாமரத்தின் வேரிலே பழமானது பழுத்து, அது நன்கு முற்றி, அதன் அடியிலே வெடிப்பு ஏற்பட்டுச் சுளைகள் வெளிவந்தன. அதனின்றும் இனிய தேனானது, 'பூமியிலே பாதாள கங்கை பீறிட்டு வந்ததோ என்று சொல்லும் படியாகக் குதித்து வந்தது. அப்படிக் குதித்து வந்த புத்தம் புதுத் தேனானது அருகிலிருந்த ஆற்று நீரிலே கலந்து பெருகிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட குறும்பலாமரத்தினடியிலே கொலுவீற்றிருக்கின்ற, மெய்யறிவின் உருவினரான தலைவர். நம் குற்றாலநாதர், அவர் பேரிலே பிரமைகொண்ட பெண்களோ மிகப்பலர். அவர்களுள் நானும் ஒருத்தியே என்பதைக் காண்பாயாக.

விருத்தம் வேளிலே பழம்பழுத்துத் தூரிலே

சுளைவெடித்து வெடித்த தீந்தேன் பாரிலே பாதாள கங்கைவந்த

தெனக்குதித்துப் பசுந்தேன் கங்கை நீரிலே பெருகுகுறும் பலாவிலே

கொலுவிருக்கும் நிமல மூர்த்தி பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே

நானுமொரு பெண்கண் டாயே. - (பசுந்தேன் - பசுமையான தேன்; புதிய தேனுமாம். அது பாய்தலால் ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுத்தது என்பார்