பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 65

எளிதில் விடமாட்டேன்’ என்று சொல்லு. இப்படிச் சொல்லிப் போய்த் துது சொல்லி வருவாயாக இராகம் - காம்போதி தாளம் - ஆதி பல்லவி தூதுநீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன்போய்த் தூதுநீ சொல்லி வாராய்.

அனுபல்லவி ஆதிநாட் சுந்தரர்க்குத் தூதுபோ னவர் முன்னே (தூது நீ)

சரணங்கள் உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை

மறந்தால் மறக்கவும் கூடாது - பெண்சென்மம் என்று பிறந்தாலும் பேராசை ஆகாது அஃதறிந்துஞ்

சலுகைக் காரர்க்கு ஆசையாயி னேன் இப்போது

(தூது நீ) நேற்றைக் கெல்லாங்குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் நித்திரா பாவிக்கென்ன போட்டி - நடுவே இந்தக் காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரக நோய்க்கு

மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி

(தூது நீ) வந்தால்இந் நேரம்வரச் சொல்லு வராதி ருந்தால் மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர் தந்தாலென் நெஞ்சைத் தரச்சொல்லு தராதி ருந்தால்

தான்பெண்ணா கியபெண்ணை நான் விடேன் என்று.

(தூது நீ) (மாயம் செய்தவர் - வஞ்சனை செய்தவர். சலுகைக் காரர் - சலுகைகளுக்கு உரியவர்; பெரிய மனிதர். காற்று - தென்றற் காற்று. மாலை - அடையாள மாலையாகிய கொன்றை. பரஞ்சாட்டுதல் - குற்றஞ்சாட்டிப் பொறுப்பு உரைத்தல்)