பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

29. தக்க சமயம் கேளடி! மின்னற் கொடியினைப் போன்றவளே! செவ் வேளாகிய குமரனை ஈன்று உலகுக்கு அருளியவர்: கரும்புச் சிலையினையுடையவனான மதனவேளை வென்று அழித் தருளினவர்; திரும்பத் தாமே அவ்வேளை உயிர் பெற அழைத்து அவனுக்கு அருளும் செய்தவர் அகங்காரம் மிகுந்த காரணத்தினாலே, தாருகாவனத்து முனிவர்கள் பெரிய வேழத்தினை ஏவிவிட, அதனைக் கொன்று அதன் தோலை உரித்தவர் குற்றாலநாதர். அவருடைய கொலு அமரருக்கும் கூட எளிதாகக் காணமுடியாத தொன்றாகும். கடுமையான சமயங்கள் பலவுண்டு. ஆனாலும், தக்க வேளை எதுவென நான் சொல்வேன்; அதனைக் கேட்பாயாக.

விருத்தம் செவ்வேளை ஈன்றருள்வார் சிலைவேளை

வென்றருள்வார் திரும்பத் தாமே அவ்வேளை அழைத்தருள்வார் அகங்கார

மிகுதலால் அறவர்ஏவும் கைவேழம் உரித்தவர்குற் றாலர்கொலு அமரருக்குங் காணொ னாதால் வெவ்வேளை பலவுமுண்டு வியல்வேளை

நான்சொலக்கேள் மின்ன னாளே. (செவ்வேள் - முருகன். சிலைவேள் - மதனன். அறவர் - தாருகா வனத்து முனிவர். கைவேழம் - துதிக்கையினையுடைய வேழம்; வலியுடைய வேழமும் ஆம்)

30. நல்ல சமயமடி!

சகியே! திரிகூடராசருக்குத் திருவனந்தல் முதலாக ஏகாந்தம் முடியத் தினமும் ஒன்பது காலப் பூசை உண்டு. பெரிதான அபிடேகங்கள் நடைபெறுகின்ற அந்த ஏழு காலத்தினும், அவரிடம் ஒருவரும் பேசுவதற்கு ஏற்ற சமயம் அன்று. வாரத்து ஏழு நாள்களில், மூன்று திருநாள்களாகவே இருக்கும். வசந்தத் திருநாளும் மாத வழிபாடுகளும் வருட