பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 67

வழிபாடுகளும் நடக்கும். பல திருநாள்களும் அடிக்கடி நிகழ்வனவாம். குழல் வாய்மொழிப் பெண்ணானவள், ஒரு நாளுக்கு ஒரு நாள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரோடு ஆனந்தமாகக் கொலு வீற்றுக் கொண்டிருப்பாள். செருக்கு மிகுந்த திருக்குற்றாலநாத லிங்கருடைய பெருங்கொலுவிலே தக்க சமயம் அறியாமல் சென்று, சித்தர்களும் தேவ கணங்களும் சிவ கணங்களும் உள்ளே நுழையவிடாமல் தடை செய்து நிற்கக் கடைவாயிலிலேயே காத்து நிற்பார்கள் சிலர்.

அப்படிப்பட்ட சமயங்களில், எப்படியோ கடந்து உள்ளே சென்றவர்கள், நந்தியின் பிரம்படிக்குப் பயந்து ஒதுங்கி, அங்கே ஆட்கொண்டார் குறட்டிலே போய் நிற்பார்கள். மைதீற்றிய கருங்கண்களை உடையவரான மாதர்கள், தூதாக அனுப்பிய வண்டுகளும் கிளிகளும் ஒவ்வொரு வாசலிலும் உள்ளே செல்லத்தக்க சமயம் நோக்கிக் காத்திருக்கும். குற்றாலத்துச் சங்க விசுவநாதன் பெற்ற புதல்வனாகிய சிவராம நம்பி என்பவன் செய்கின்ற ஆகம விதிப்படியுள்ள சடங்குகள் மிகவும் அழகுடன் விளங்கும். பாலாறாகவும் நெய்யாறாகவும் அபிஷேக நைவேத்தியம் பணிமாறுகின்ற காலத்தையும் அவன் ஏற்றுக் கொண்டருள் வான். நான்கு வேதங்களாகிய பழம்பாட்டும், நாயன்மார்கள் மூவர்கள் சொன்ன திருமுறைகளும், நால்வகைக் கவிகளையும் பாடும் புலவர்களின் புதுப்பாட்டும் அங்கே சதாமுழங்கிக் கொண்டேயிருக்கும். நீலகண்டர், குற்றாலர் அப்படிக் கோலங்கொண்டருளுகின்ற நிறைந்த கொலுவிலே எவர்க்கும் எவ்விதமான பேதமும் கிடையாது. எல்லாம் எல்லோருக்கும் பொதுவான காட்சியேயாகும். அப்போது குற்றாலர் தம் தேவியுடன் அங்கே கொலு வீற்றிருப்பார். அதனால், நம் ஆசையை அங்கே சொல்லிவிடக்கூடாது. - -

முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் வந்துநின்று தம் காரியங்களைச் செய்கின்ற திருவனந்தல் வாய்க்கும் நேரத்திலே, பூங்கொம்பினைப் போன்ற அழகினையும், குழையணிந்த காதுகளையும் உடைய மடந்தையானவளின் பள்ளியறையிலே யிருந்து, அவர்தம் கோவிலை நோக்கிப்