பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

வழக்கத்தை இலக்கியங்களுள் காணலாம். தெண்ணீர் - தெளிந்த நீர் விண்ணிர் - ஆகாய கங்கை. உண்ணிர் - உள்ளத்து நீர்மை. உறைக் கிணறு - வட்டவடிவமான பல ஒடுகளை அடுக்காக வைத்துக் கட்டப்படும் கட்டுமானத்தையுடைய கிணறு, இங்கே, சுழலும் வளையல்கள் அப்படி ஒன்றன்மேல் ஒன்றாய் ஒடுகளாகக் கண்மேல் விளங்கக் கண்கள் உறைக் கிணறுகள் போல அமைந்தனவென்க.)

32. கூடாய் கூடலே!

பாடிய பழைய வேதங்கள் நான்கும் தேடியும் அறியாத நாயகன், நாகர்களும் வந்து பணிகின்ற நல்ல திருக்குற்றால நாதரின் நாயகன், பாவலர்கள், மக்களின் காவலர்கள், ஆகியோரின் நாயகன் பதஞ்சலி முனிவர் பணியும் பாதங் களை உடையவன்; வளைந்த இளம்பிறையினைச் சூடி யிருக்கும் நாயகன், குழல்வாய் மொழியானவள் சேர்கின்ற அழகிய நாயகன், குறும்பலாவினருகே என்னைக் கூடுவார் என்பது உண்மையானால், கூடலே! நீயும் இப்போது எனக்குக் கூடிவர மாட்டாயோ?

பாடியமறை தேடிய நாயகர்

பன்னகர்பணி நன்னகர் நாயகர் பாவலர்மனுக் காவலர் நாயகர்

பதஞ்சலி பணி தாளர். 1 கோடியமதி சூடிய நாயகர்

குழல்மொழி புணர் அழகிய நாயகர் குறும்ப லாவினிற் கூடுவர்

ஆமெனிற் கூடலே நீகூடாய் 2

(பாடியமறை - முழங்கிய வேதங்கள், தேடிய நாயகர் - வேதங்களையும் கடந்தவன் இறைவன் என்பது கருத்து. பன்னகர் - நாகர் இவரைப் பாதாள லோக வாசிகள் என்பர். பதஞ்சலி - புலிக்கால் முனிவர்; யோக சூத்திரம் செய்தவர். கோடிய மதி - வளைந்த மதி, இளம்பிறை. குறும்பலாவினிற் கூடுவர் ஆம் எனில் - குறும்பலாவி னருகிலேயே என்னைக் கூடி என் தாபத்தைத் தணிப்பர் என்றாள்.)

静。