பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 71

தாமரை மலர்வாசனாகிய பிரமதேவனையும், நீலமேக வண்ணனாகிய திருமாலையும் அந்நாளிலே அடிமுடி தேடச் செய்து களைத்துச் சோர்ந்து போகும்படி செய்தவர். காம தேவனை எரித்தவர்; சந்திரனைச் சடையிலே முடித்தவர்; எல்லா நன்மைகளுக்கும் காரணமாக விளங்கும் மறையாகிய வேதங்களை அருளிச்செய்தவர்; அந்த வேதங்கள் அனைத்தும் கருதிய ஒரே மூலப்பொருளாக விளங்குபவர் யானை முதலிய பலவகை உயிரினங்களும் பூசித்த நாயகர் குறுமுனியாகிய அகத்தியரின் தமிழை மிகவும் விரும்பிக் கேட்டு இன்புற்ற தலைவர். குற்றாலப் பெருமானாகிய அவர், குறும்பலா வினிடத்திலே என்னைக் கூடுவாரானால், கூடலே! நீயும் இப்போது கூடி வருவாயாக

கஞ்சனைமுகில் மஞ்சனை நொடித்தவர்

காமனைச் சிறு சோமனை முடித்தவர் காரண மறை ஆரணம் படித்தவர்

கருதிய பெருமானார். - 1 குஞ்சாமுதற் பூசித்தநாயகர்

குறுமுனிதமிழ் நேசித்த நாயகர் குறும்ப லாவினிற் கூடுவ

ராமெனிற் கூடலேநீ கூடாய். 4

(கஞ்சன் - தாமரை மலரிலே வாசஞ் செய்பவன்; பிரமன். முகில் மஞ்சன் - கருநிற மேகம் போன்ற வண்ண முடையவன் திருமால். நொடித்தல் - இளைத்தல். மறை ஆரணம் - மறையாகிய வேதம். கருதிய பெருமான் - அவள் கருதிய பெருமானாகவும் கொள்ளலாம்.)

இவ்வாறு வசந்தவல்லியானவள் தன் பாங்கியைத் தூதாக அனுப்பிவிட்டுத் தான் தனித்துக்கிடந்து வெந்து கொண் டிருந்த வேளையிலே, குறவஞ்சியான சிங்கி என்பவள் வந்து குறி சொல்லுகிறாள். அந்தச் செய்திகளை அடுத்த பகுதியிலே

காணலாம்.

女女女