பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

IV. குறவஞ்சி நாடகம்

1. குறவஞ்சி வருகிறாள்! இறையவர் திருவிளையாடல் புரிந்த குற்றாலத்துச் சங்க வீதியிலே, அழகிய நெற்றிக் கண்ணினரான அவர் முன்னே, தரையில் நழுவ விட்டுவிட்ட தன் சங்கு வளையல்களை உள்வீட்டிலே சென்று தேடுவதற்காக இடத்தை வளைத்துக் கொண்டிருக்கும் அடையாளத்தைப் போலக் கூடலிழைத்த வளாக இருந்து கொண்டு வசந்த வல்லியானவள் மயங்கிக் கொண்டிருந்தாள். அந்த வேளையிலே வளையல்கள் நிரம்பிய தன் கைகளை அசைத்தவளாக, மாத்திரைக் கோலினை ஏந்திக் கொண்டு, மணிக்கூடையினையும் இடுப்பிலே தாங்கிக் கொண்டு, மாளிகைகள் நிரம்பிய திருக்குற்றாலநகரின் தெருவினூடே, குறவஞ்சி ஒருத்தியும் வருவாளாயினாள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆடல்வளை வீதியிலே அங்கணர்முன் போட்டசங்கம் அரங்கு வீட்டில் தேடல்வளைக்குங் குறிபோற் கூடல்வளைத்

திருந்துவல்லி தியங்கும் போதில் கூடல்வளைக் கரம் அசைய மாத்திரைக்கோல்

ஏந்திமணிக் கூடை தாங்கி மாடமறு கூடுதிரி கூடமலைக்

குறவஞ்சி வருகின் றாளே. (ஆடல் - திருவிளையாடல், வளை - சங்கம்; சங்கவீதி, அங்கணர் - அம் கண்ணர், அழகிய நெற்றிக் கண்ணினை யுடையவர். அரங்கு வீடு - உள்வீடு. தேடல் வளைக்கும் - தேடுவதற்காகச் சுற்றி வளைத்துக் கொள்ளும். குறவஞ்சி - குறப்பெண்.) -