பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

வீரவிருதாகிய நெற்றியையுடைய எருதுக்கொடியினை உடையவன், மூவகை முரசுகளும் சதா முழங்கிக் கொண் டிருக்கும் கொலுமண்டபத்தினை உடையவன், அண்ட கோடிகளை எல்லாம் தன் ஆணையால் அடக்கி மழை போல் அருள்வெள்ளம் பொழிந்து, அனைத்துயிரையும் காத்தருளும் வெண்கொற்றக் குடையினையும் உடையவன்; இளவழகியாகிய குழல்வாய்மொழி அம்மையினது அருட்கண் களாகிய அழகிய கருவண்டுகள் சதா மொய்க்கின்ற கொன்றை மாலையினை உடையவன்; பூக்கள் நிரம்பிய செண்பகச் சோலையிலே வீற்றிருக்கின்ற தம்பிரான், தேவர்களின் தலைவன்; அவன் திருவருளை வாய்விட்டுப் பாடிக்கொண்டு, விளங்குகின்ற திருநீற்றையணிந்து கொண்டு நெற்றியிலே பொட்டும் இட்டுக் கொண்டு சிறந்த பாசிமணிமாலையும் குன்றிமணிமாலையும் அணிந்து கொண்டு,

சேவக விருது செயவிடைக் கொடியான்; மூவகை முரசு முழங்குமண்டபத்தான்; அண்டகோடிகளை ஆணையால் அடக்கிக் கொண்டல்போற் கவிக்கும் கொற்றவெண் குடையான்; வாலசுந் தரிகுழல் வாய்மொழி அருட்கண் 15 கோலவண் டிணங்குங் கொன்றைமா லிகையான்; பூவளர் செண்பகக் காவளர் தம்பிரான்; தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி இலகுநீ றணிந்து திலகமும் எழுதிக் குலமணிப் பாசியும் குன்றியும் புனைந்து 20 (சேவகம் - ஆண்மை; மூவகை முரசுகள் - படை கொடை மணமுரசுகள். அண்ட கோடிகள் - எண்ணற்ற உலகங்கள். பூவளர் - பூக்கள் வளமுடன் விளங்கும். இலகுநீறு - விளக்க முறத் தோன்றும் திருநீறு. குலமணிப் பாசி - நல்ல மணிகள் கோத்த பாசிமணி மாலை)

வெளுத்த உடை பொருந்திய இடையிலே தாங்கி யிருக்கும் கூடையும், வலதுகையிலே பிடித்திருக்கும் மாத்திரைக் கோலும் சொல்லுக்குச் சொல் விளங்கும் ஒருவிதமான பாசாங்கும் நடக்கும்போது முலைகளிலே ஒரு