பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

கோடு பொருமுலை மூடு சலவையின்

ஊடு பிதுங்கிமல் லாடவே தோடி முரளி வராளி பயிரவி

மோடிபெற இசை பாடியே நீடு மலைமயில் ஆடு மலைமதி

மூடி மலைதிரி கூட மலைக்குற (வஞ்சி) (கோடு - குன்றம், சலவை - மேலாடை சால்வை. மோடி பெற - கேட்பவர் மயக்கமுறவும் ஆம்)

5. இடைபொறுக்காது! 'முன் காலத்திலே மேருமலையையே வில்லாக வளைத் தவர் முக்கண்ணராகிய திருக்குற்றாலநாதர். அவருடைய மலைச்சாரலிலேயுள்ள, கன்னங் கரேலெனக் கறுத்திருக்கின்ற கூந்தலுடைய அழகிய குறத்தி அவள். அவளுடைய மார் பினிடத்தே பொற்குடங்களைப் போலப் புடைத்து எழுந் துள்ள பருத்த கொங்கைகளானவை இன்னமும் பருத்தால், அச்சுமையை அவளுடைய இடையானது பொறுக்க மாட்டாது ஒடிந்து விடுமே!’ (கண்டோர் கூற்று.)

- கொச்சகக் கலிப்பா முன்னம் கிரிவளைத்த முக்கணர்குற்றாலவெற்பில் கன்னங் கரியகுழற் காமவஞ்சி தன்மார்பில் பொன்னின் குடம்போல் புடைத்தெழுந்த பாரமுலை இன்னம் பருத்தால் இடைபொறுக்க மாட்டாதே. (கிரி - மேருமலை, காமவஞ்சி - அழகிய பூங்கொடி. காமர் - விரும்பத்தக்க. பாரமுலை - பெரிய முலைகள்)

6. கொடி வந்தாள்! வஞ்சியானவள் வந்தாள், மலைக் குறவஞ்சியானவள் வந்தாள்; திரிகூட மலையிலேயுள்ள இன்பமோகினியான வசந்தவல்லியின் முன்னாக, அவளுடைய மிதமிஞ்சிய விரக நோய்க்கு ஒரு சஞ்சீவி மருந்தினைப் போலே, குறவஞ்சி

யானவள் வந்தாள்.