பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

கொண்டிருக்கும். தேன் பெருகியிருக்கும் செண்பக மலர்களின் வாசமோ வானுலகிலும் சென்று பரவும். அருளோடு அடியவர்களுக்கு வழங்கும் கொடைத்தன்மையினையுடைய மகராசர் திருக்குற்றாலநாதர் குறும்பலாவினடியிலே கோவில் கொண்டிருக்கும் ஈசராகிய அக்குற்றால நாதருடைய, வளம் பெருகிக் கொண்டிருக்கும் திரிகூட மலையே எங்கள் மலையுமாகும்.

முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்

முற்றம்எங்கும் பரந்துபெண்கள்

சிற்றிலைக் கொண்டோடும் கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்

கிம்புரியின் கொம்பொடித்து

வெம்புதினை இடிப்போம் செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்

தேனலர்சண் பகவாசம்

வானுலகில் வெடிக்கும் வழங்குகொடை மகராசர் குறும்பலவில் ஈசர்

வளம்பெருகும் திரிகூட

மலை எங்கள் மலையே. - ஆடும் நாகப் பாம்புகள் கக்கும் நாகரத்தினங்கள் கோடி கோடியாகக் கிடந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். வெண்ணிலவைத்தாம் உண்ணும் வெண்சோற்றுக் கவளமென நினைத்து, யானைகள் அதனை வழிமறித்து நிற்கும். வேடுவர்கள் தினைப்பயிரினை விதைப்பதற்காகப் பண் படுத்தும் தினைப்புனங்கள்தோறும் அவர்கள் காடழித்து நெருப்பிடலால், வியப்பான அகில், குங்குமம், சந்தனம் முதலியவற்றின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். காட்டின் எம்மருங்கும் வரையாடுகள் துள்ளிக் குதித்துப் பாய்ந்து ஒடிக்கொண்டிருக்கும். காகமும் அணுகாத உயர்ந்த மலையுச்சிகளிலே, மேகக்கூட்டங்கள் வந்து படிந்து கொண்டிருக்கும். நெடிய குறும்பலாவினடியிலே இருக்கும்