பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 89

ஆர மாமுலை மின்னார் அவரவர்

அல்குல் தேர்கள் அலங்காரஞ் செய்யப் பார மாமதி வெண்குடை மிஞ்சப்

பறக்கும் கிள்ளைப் பரிகள்முன் கொஞ்சத் தேரின் மாரன் வசந்தன் உலாவுந்

திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே. 1 (2) மேகத்தை ஒப்பான கருமையுடைய கூந்தலை உடையவரான பெண்களைக் கண்டு நாணங் கொண்டவை யாகக் கடலை நோக்கிச் சென்று சேர்ந்தன கறுப்பான மேகங்கள். அங்கே கடல் நீரை முகந்து கொண்டு, கச்சுகளைச் சேர்ந்த கொங்கைகளுக்கு ஒப்பான மலைகளைச் சேர்ந்து, அங்கே வானத்தே வில்லினை இட்டு, நீரைச் சேர்ந்த மழைத் தாரையாகிய அம்புகளுடன், நெடிய கீழ்க்காற்றாகிய தேரிலே ஏறி, வெம்மையாளனாகிய கதிரவனின் தேரைச் சுற்றி முற்றுகையிட்டுக் காலத்தையும் கார்காலமாக மாற்றி, முதுவேனிலை வெற்றிகொள்ளும் வளத்தினையுடையது, திருக்குற்றாலநாதரின் தென் ஆரிய நாடாகும். -

காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக்

கடலைச் சேர்ந்த கறுப்பான மேகம் வாரைச் சேர்ந்து முலைக்கிணை யாகும்

மலையைச் சேர்ந்து சிலையொன்று வாங்கி நீரைச் சேர்ந்த மழைத்தாரை அம்பொடு

நீளக் கொண்டலம் தேரேறி வெய்யவன் தேரைச் சூழ்ந்திடக் கார்காலம் வெல்லும்

திருக்குற்றாலர்தென் ஆரியநாடே. 2 (3) எருமை மாடுகள் கூட்டங் கூட்டமாக இறங்குகின்ற நீர்த்துறையிலே, அவை சொரிகின்ற பாலினைப் பருகிய வாளைமீன்களானவை. மணம் பொருந்திய கூழைப் பலாவினை நோக்கிப் பாயும். அதனால் கொழுவிய பலாக்கனிகள் வாழை மரங்களின் மேலே உதிரும். வாழை மரங்கள் சாய்ந்து ஒப்பற்ற தாழை மரத்தினைத் தாக்கும். வருகின்ற விருந்தினர்க்குச் சோறிட்டு உபசரிப்பவரைப்