பக்கம்:திருக்கோலம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 90 திருக்கோலம்

மூப்பு ஆகியவற்ருல் துன்புறும் மக்களே அவற்றினின்றும் மீட்டு அமைதியைத் தருபவள் என்பதை, ஜந்ம ம்ருத்யு ஜராதப்த ஜன விச்ராந்தி தாயினி (351) என்ற பெயர் விளக்குகிறது. எல்லா வகையான மரணங்களையும் போக்கு பவள் என்ற பொருளே உடையது, ஸ்ர்வ ம்ருத்யு நிவாரிணி’ (652) என்னும் திருப்பெயர்.

அம்பிகையின் திருவடி கால ஜயத்துக்கு உதவுவது. அம்பிகையின் திருக்கரம் வரதமும் அபயமும் காட்டி அருளின் பத்தைப் பெற உதவுகின்றன. அவளுடைய இனிய மொழியோ அஞ்சுகின்ற உயிர்களுக்கு அமுதத்தைப் பெய்வதுபோல இனிமையாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்த அபிராமி பட்டர், அன்னேயை நோக்கி விண்ணப்பம் செய்துகொள்ள முற்படுகிருர்,

"தாயே, என்னுடைய வாழ்நாள் தீர்ந்து விட்டால் உயிரைக் கொண்டுபோகக் காலன வருவான். என் வாழ் நாளாகிய காலம் முடிந்துவிட்டது என்பதை நான் அறியாமல் போனலும், அதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்து, காலம் முடிந்து விடும்போது வருவதனுல் த:னே அவனுக்குக் காலன் என்னும் பெயர் அமைந்திருக் கிறது? அவன் பயங்கரமான வடிவத்துடன் கையில் மூன்று கப்புகளே உடைய சூலத்தோடு வருவான். அந்தச் சூலாயுதத் தால் என்னேக் குத்திக் கொண்டுபோக வருவான். அதை என் மேலே விடுவான். அப்போது நான் மிகவும் துடிதுடித்துப் போவேன். அந்தச் சமயத்தில் நீ வந்து என்னைக் காப்பாற்றவேண்டும் என்று சொல்கிறர். மற்றச் சமயங்களில் நீ என் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து நின்ருலும் அந்தச் சமயத்தில் என் கண்காண நின்ருல் அச்சம் நீங்கி நிற்பேன். காலன் கண்காணவும் நீ நிற்க வேண்டும். அப்போது என்னத் துன்புறுத்தாமல் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/100&oldid=578039" இலிருந்து மீள்விக்கப்பட்டது