பக்கம்:திருக்கோலம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:92 r திருக்கோலம்

அடுத்தபடி கையைப் பற்றிச் சொல்கிருர், உன்னு டைய அபயகரத்தைக் கண்டால் என் அச்சம் போய்விடும்; வரதத் திருக்கரத்தைக் கண்டால் அருள் கிடைக்கும் என்ற உறுதி உண்டாகும். அந்தக் கைகள் வளைகளே அணிந் திருக்கின்றன. நீ எழுந்தருளும்போது அந்த வளைகள் கல கலக்கும். அந்த ஒலியே உன் வருகையைத் தெரிவிக்கும். அந்த ஒலியைக் கேட்டு உன் திருக்கரங்களைப் பார்த்து மகிழ் வேன். எங்கே எனக்கு அபயம் ஈந்து அருள் செய்யும் கரங்கள் என்று கிடந்து தடுமாருத வண்ணம், அந்த வளைகள் ஒலித்து, இங்கே பார் என்று சொல்லாமல் சொல்லும். ஆதலால் வளையல் அணிந்த கைகளேயும் கொண்டு பிரசன்னமாகவேண்டும்’ என்கிருர். -

சூடகக் கையையும் கொண்டு ...வெளிநில் கண்டாய்.

அம்பிகையின் இனிய மொழியை நினைத்துப் பார்க்கிருர். அது பாலேப்போலவும் தேனைப் போலவும் பாகைப்போலவும் இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கிறது. மொழி யின் ஒலியைக் கேட்டாலே இனிமையாக இருக்கிறது. பாலே உண்டு இன்பம் பெறுவது போல அந்த ஒலியையே கேட்டுக்கொண்டு இருக்கலாம், பொருளை நோக்காமல். மருந்தானலும் தேைேடு குழைத்து உண்டால் இனிமை யாக இருக்கும்; அம்பிகை நம்முடைய நோய்க்கு மருந்து போன்ற சொற்களைச் சொல்பவள். ஆனல் அது மிகவும் இனிமையாக இருக்கும். பாகு மற்றப் பண்டங்களே இலளிப் புடையவை யாக்கும். அம்பிகையின் திருவாய்மொழி எல்லாப் பொருள்களுக்கும் இனிமை தந்து இணைக்கும். மிகவும் மென்மையாக உள்ள பணி மொழியை உடையவள் எம்பெருமாட்டி. - - ‘.

பாலேயும் தேனையும் பாகையும்

போலும் பணிமொழியே! . என்று அம்பிகையை, அவளுடைய இன் மொழியின் சிறப் பைச் சொல்லி விளிக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/102&oldid=578041" இலிருந்து மீள்விக்கப்பட்டது