பக்கம்:திருக்கோலம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் ஆற்றலும் கருணையும்

- சிவபெருமான் தட்சினமூர்த்தியாக எழுந்தருளியிருந்

தான்; கல்லாலின் கீழ் மெளன. முத்திரையுடன் வீற்றிருந் தான். எங்கும் மெளனம் நிலவியது. உயிர்கள் யாவும் விரதம் பூண்டவற்றைப்போல் காம உணர்ச்சியின்றி இருந்தன. ஆண் பெண் உறவே இல்லாமல், சந்ததி வளர்ச்சியும் இல்லாமல் எங்கும் ஒர் அமைதி நிலவியது, அதைக் கண்டு தேவர்களுக்கு அச்சம் உண்டாயிற்று. சிவபெருமான மெளனத்திலிருந்து கலைத்துப் பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி ச்ெய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு மகன் அவதாரம் செய்வான். தேவர்கள் வாழ்வைப் பறித்துக் கொண்ட சூரபத்மனுடைய ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். சிவபெருமானே, என்னுடைய சக்தியிலைன்றி வேறு யாராலும் உன்னே அழிக்க முடியாது’ என்று அந்த அசுரனுக்கு வரம் கொடுத்து விட்டான். அந்த வரபலத் தினல் சூரன் தேவர்களே அடிமைகொண்டு தான் நினைத்த படியெல்லாம் அவர்களே ஆட்டிவைத்தான்.

சிவபெருமானே எதைப்பற்றியும் கவலைப்படாமல்

மெளன விரதத்தை மேற்கொண்டு அமர்ந்திருந்தான். இன்னும் எவ்வளவு காலம் இந்த மோன ஞானத்தவம்

தொடருமோ தெரியவில்லை. அதுவரையில் தேவர்கள்

நிலை என்னுவது? உலகம் என்னுவது? - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/104&oldid=578043" இலிருந்து மீள்விக்கப்பட்டது