பக்கம்:திருக்கோலம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் ஆற்றலும் கருணையும் g?

சிவபக்தர்கள் சிவபெருமான உள் ளத்திலே தியானித்துச் *மாதி நிலையை அடைவார்கள். எல்லோருடைய தியானத் துக்கும் உரிய 'பொருளாக இருக்கும் இறைவன் யாரைத் தியானம் பண்ணித் இவம் செய்தான்? அவனுக்கு மேலே ஒரு கெய்வம் இருந்தால்தானே அவன் தியானம் பண்ண முடியும்? அப்படி இல்லையே!

அவன் ஒரு மூர்த்தியை உள்ளத்துள்ளே நிறுவித் தியானம் அண்ணிகுைம். இந்த இரகசியத்தைக் குமரகுருபர முனிவர் சொல்கிருர்; மீட்ைசியம்மை பிள்ளைத்தமிழில் பாடுகிருர், . *

தியானம் பண்ணுகிறவர்கள் தம்முடைய உள்ளத்தில் இறைவனுடைய வடிவத்தை நிறுத்திப் பழகுவார்கள்; சிேச்சுக்கூட விடாமல் தம் உள்ளமென்னும் கிழியில் இறைவ அ?-ய திருவுருவத்தை எழுதிக்கொண்டு அதையே

பார்த்துமைேலயம் அடைவார்கள். இதைத் திருநாவுக்கரசு சுவாமிகள் சொல்கிருர், .

உயிரா வணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி..?? இப்படிச் சிவபெருமான் மூச்சுக்கூட விடாமல் யோகத் தில் இருந்து தன் உள்ளத்தில் ஒருவருடைய ஒவியத்தை எழுதிக் கொண்டு அதையே உற்றுநோக்கித் தவம் கிடந் தானம்! அந்த மூர்த்தி யார்? அம்பிகைதான்! " .

“...எறிதரங்கம் .

உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன், திருவுள் ளத்தில் அழகு.

ஒழுக எழுதிப் பார்த்திருக்கும். உயிர் ஓவியமே: - என்று மீட்ைசியம்மையைப் பாடுகிருர், குமரகுருபரர். புவனங்களையெல்லாம் கடந்து நிற்கின்ற எம்பெருமான் தன்

தி-7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/107&oldid=578046" இலிருந்து மீள்விக்கப்பட்டது