பக்கம்:திருக்கோலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருக்கோலம்

யையும் பெற்றுக் கொண்டாள் அன்னே. அவள் ஆற்றல் எவ்வளவு பெரிது! -

எல்லோருக்கும் மேலானவர் என்று சொல்பவர் களுக்கும் மேலாக இருப்பவள் அன்னை; பராபரை. பராத் பரா என்பது தமிழில் பராயரை என வந்தது. பரமேசு வரனேயும் அடக்கி ஆளுகிறவள் அவள். பரன் அவன்; அவனுக்கு மேற்பட்ட பராபரை அவள்.

அத்தகைய பெருமாட்டியினுல் தமக்குக் கிடைத்த அநுபவத்தைச் சொல்கிறர் ஆசிரியர். அம்பிகை நம்முடைய வாயில்ை புகழ்ந்து எல்லே காட்டும் அளவுக்குள் அடங் காதவள். மனத்தில்ை நினைத்துப் பார்த்து எல்லே தெரிந்து கொள்ளுவதும் இ ய லா து. மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத வடிவம் அவள் அழகிய மூர்த்தி. சமகுேவாசாம் அகோசரா? (415) என்று லலிதா சகசிர நாமம் கூறும். -

அப்படி உள்ளவள் தன்னுடைய அளவற்ற கருணை யினல் தன் பக்தர்களுக்குத் தரிசனம் தருவாள். உண்முகத் தும் புறத்தும் தரிசிக்கும்படி தன் திருவுருவத்தைக் காட்டு வாள். அன்பர்கள் செய்யும் பூஜைக்கு மகிழ்ந்து தரிசனம் அளிப்பாள். அன்பர்கள் எப்போதுமே அவளுடைய திரு வாராதனத்தில் ஈடுபட்டிருப்பார்கள். பல வகையான கிரியாகலாபங்களே உடையது தேவி பூஜை. அந்தக் கிரியை களே யெல்லாம் ஏற்று மனமகிழ்ந்து அவர்களுக்கு வெளிப் படையாகக் காட்சி தருவாள்.

இந்தத் திவ்ய தரிசனத்தைப் பெற்று இன்புற்றவர் அபிராமிபட்டர். இறைவனே மயக்கி அவனுடைய ஒரு பாதியைத் தன்னுடையதாக்கிக்கொண்ட மகா சக்தியாகிய அன்ஆன, தன் இணையற்ற கருணையால் தன் குழந்தையாகிய அபிராமியட்டருக்குக் கண்ணுக்கும் கருத்துக்கும் வாக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/110&oldid=578049" இலிருந்து மீள்விக்கப்பட்டது