பக்கம்:திருக்கோலம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தள்ளத் தகாது

சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி, அவன் விரதத்தை அழித்து அவனுடைய வாமபாகத்தை அன்னே ஆக்கிரமித்துக்கொண்ட அற்புதத்தைச் சொன்ன அபிராமி பட்டர், இன்னும் அந்த நிலையிலேயே சொக்கிக்கிடக்கிருர். சிவபிரானுடைய இடப்பாகத்தை ஆட்சிகொண்டு, சிங்கா தனத்தில் வீற்றிருந்து சிறப்புறுவதைப் போல அங்கே தேவி சிறந்து விளங்குகிருளாம். அவன் மும்மலத்தை மாய்க்கும் வல்லமை உடையவன். அத்தகைய பெருமானுடைய வாம பாகத்தில் அம்பிகை ஆட்சி கொண்டு சிறப்புற்று விளங்கு கிருள். -

- சிவபெருமான் மூன்று புரங்களைச் சிரித்து எரித்தவன், அவன் மேருமலையாகிய வில்லே வாேத்தான். அம்பு கோத்து எய்யவில்லை. அதற்குள் அம்பாக இருத்த திருமாலுக்கு அகங்காரம் வந்தது. அதை எண்ணிச் சிரிப்பது போலச் சிரித்தான். அந்தச் சிரிப்பே திரிபுரங்களே அழித்தது. வித்யுன்மாலி, தாரகாட்சன், வாணன் என்னும் மூன்று அசுரர்கள் இரும்பு, வெள்ளி, பொன் ஆகியவற்ருலான மூன்று பறக்கும் கோட்டைகளே உடையவர்களாகி மக்களுக்குத் துன்பத்தைச் செய்து வந்தார்கள். திரிபுரங் களையும் பறக்கச்செய்து எங்கேனும் இறக்கிப் படியச்செய் தார்கள். இவ்வாறு அவர்கள் தமக்குக் கிடைத்த கோட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/113&oldid=578052" இலிருந்து மீள்விக்கப்பட்டது