பக்கம்:திருக்கோலம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தள்ளத் தகாது I05

வரலாறு, இறைவன் அகங்காரத்தை ஒழிக்கும் அருளை யுடையவன் என்பதைச் சுட்டுகிறது.

திரிபுரத்தை அழிக்கச் சென்றபோது சிவபெருமானு டைய திருக்கரம் மேருமலையை வளைத்தது; பிரமனுடைய அகங்காரத்தைப் போக்குவதற்காக அவன் தலையைக் கிள்ளியது. ஆக, இந்த இரண்டு செயல்களையும் செய்த கையை உடையவன் சிவபெருமான் என்று அடையாளம் காட்டுகிறர்.

r தரியலர்தம்

புரம் அன்று எரியப் பொருப்பு வில்

வாங்கிய-போதில் அயன் சிரம் ஒன்று செற்ற-கையான்,

(பகைவர்களுடைய மூன்று புரங்களும் அந்த நாளில் எரியும்பொருட்டு மேருமலேயாகிய வில்லே வ8ளத்ததும்: தாமரைப் பூவில் இருக்கின்ற பிரமனுடைய தலே ஒன்றைத் துணித்ததும் ஆகிய கையையுடைய சிவபெருமான். தரிய லர்-பகைவர்; இங்கே திரிபுரர்களாகிய அசுரர்கள். புரம்முப்புரம். அன்று: பண்டறி சுட்டு. பொருப்பு-மலே; இங்கே மேருமலை. வாங்கிய-வளைத்த, போது-தாமரை மலர். செற்ற-அறுத்த. .

வாங்கிய கையான், செற்ற கையான் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.)

இவ்வாறு இரண்டு பராக்கிரமச் செயல்களைச் செய்த திருக்கரத்தை உடைய சிவபெருமானுடைய திருமேனியில் இடப்பாகத்தில் சிறந்து விளங்குகிறவள் அம்பிகை.

- - தரியலர்தம்

புரம் அன்று எரியப் பொருப்பு வில் வாங்கிய-போதில் அயன் சிரம் ஒன்று செற்ற-கையான்

இடப்பாகம் சிறந்தவளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/115&oldid=578054" இலிருந்து மீள்விக்கப்பட்டது