பக்கம்:திருக்கோலம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருக்கோலம்

இவ்வாறு அம்பிகையை விளித்த அபிராமிபட்டர், அப் பெருமாட்டியை நோக்கி விண்ணப்பித்துக்கொள்கிறர்.

அம்பிகை எல்லோருக்கும் மேலாகிய பரதேவதை. பிடித்தாலும் புளியங்கொம்பைப் பிடிக்கவேண்டும் என்பது போல அன்னேயைப் பற்றிக்கொண்டவர் இந்தப் பக்தர்.

உலகில் யாருக்கேனும் குறையிருந்தால் அவர் தம்மினும் வலியவரைச் சார்வது இயல்பு. நூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறவன் பணமுடை ஏற்பட்டால் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவனே அண்டி ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வான். இருநூறு ரூபாய் சம்பளக்காரனே தன் கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தன்னிடம் கடன் கேட்டவனுக்கு ஐந்தோ பத்தோ கொடுத்து விடுவான். ஆல்ை அவனுக்கும் பற்ருக்குறை இருக்கும். ஆகவே, அவன் தன்னேவிட அதிகச் சம்பளம் வாங்கும் ஒருவனிடம் போய்க் கடன் கேட்டு ஐம்பது ரூபாய் வாங்கி வருவான். அந்த மூன்ருவது பேர்வழியும் தன்னை விட அதிக வருவாயுடையவனிடம் போய்க் கடன் கேட்பான். இப்படியே மேலே மேலே போய்க்கொண் டிருக்கும். குறையில்லாத மனிதனே இல்லே. இறைவன் ஒருவன்தான் குறைவிலா நிறைவாக இருப்பவன். அவனே அண்டினவர்களுக்கு வேறு ஒருவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இராது. அப்போதுதான் மனக்கவலே தீரும்.

'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலே மாற்றல் அரிது?? -

என்பது திருக்குறள். ஆகவே, நாம் எல்லாரினும் சிறந்த

ஒருவரைப் பற்றிக்கொண்டால் வேறு ஒருவரை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்,

இந்த உண்மையை நன்கு அறிந்த அபிராமிபட்டர். ாரதேவதையாகிய அம்பிகையையே புகல் புகுந்தார். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/116&oldid=578055" இலிருந்து மீள்விக்கப்பட்டது