பக்கம்:திருக்கோலம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தள்ளத் தகாது 107"

எல்லோரினும் மேலானவள் என்பதை அறிந்து அவள் திருவடியையே சரணுக அடைந்தார். அதைச் சொல்கிறர்.

பரம் என்று உனே அடைந்தேன் தமியேனும்,

வேறு துணே யாரும் இல்லாத தனியனுகிய அடியேனும் நீயே எல்லாரினும் சிறந்தவள் என்று தெளிந்து உன்னைச் சரணமாக அடைந்தேன்? என்கிரு.ர். பரம்-மேலான பொருள். அம்பிகைக்குப் பரா என்ற திருநாமம் இருப்பது காண்க. பராசக்தி, பரதேவதை, பராம்பிகை, பரமேசுவரி, பராத்பரை என்றெல்லாம் அம்மையின் திருநாமங்கள் இருப்பது இந்த உண்மையை விளக்கும்.

பரம் என்பதற்குப் பாரம் என்றும் ஒரு பொருள் உண்டு. ஆகவே இங்கே, அடியேன் உனக்குப் பாரம் என்று உன்னே அடைந்தேன். என்னைத் தாங்குபவள் நீயே; உனக்கே நான் பாரம் என்று வந்து புகுந்தேன்’ என்றும் பொருள் கொள்ளலாம். வானமாய் நின்றின்ப மழை யாய் இறங்கிஎன வாழ்விப்ப துன்பரங்காண்’ (தாயு மானவர் பாடல்) என்பதில் பரம் என்பது இந்தப் பொருளில் வந்திருப்பதைக் காணலாம். நீயே என்னைத் தாங்கிக் கொள்வதற்குரியவள்; ஆதலால் உனக்குப் பாரம் அடியேன் என்று அடைந்தேன்’ என்ருர். தன் கடன் அடியேனேயும் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப் பதே’ என்று அப்பர் சுவாமிகள் இறைவனிடம் விண்ணப் பித்துக் கொண்டது போன்றது. இது.

அம்பிகையால் ஆளப்பெற்ற பக்தர்கள் பலர். அவர்கள் பல வகையிலும் உயர்ந்த பக்குவத்தைப் பெற்றவர்கள். அவள் திருவடியிலே தலேவைத்து வணங்குபவர்களில் தேவர்கள் உண்டு; முனிவர்கள் இருக்கிருர்கள்; உத்தம மான மனிதர்கள் இருக்கிறர்கள். 'மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி, குனிதரும் சேவடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/117&oldid=578056" இலிருந்து மீள்விக்கப்பட்டது