108 திருக்கோலம்
கோமளமே!’ என்று அம்பிகையின் பெருமையை இந்த ஆசிரியர் முன்னே எடுத்துக் காட்டியிருக்கிறர்.
அவ்வாறு அன்னையின் திருவருளுக்கு ஆளான பக்தர் களுடைய வரிசையை இப்போது ஆசிரியர் எண்ணிப் பார்க் கிருர் நாமும் அன்னையைச் சரண் புகுகிருேமே! இவ்வளவு பெரியவர்கள் புகும் இடம் அல்லவா அது? அவர்கள் எங்கே? நாம் எங்கே?' என்று அவர் கருதுகிருர். அப்படியால்ை இங்கே எனக்கு இடம் இல்லையோ! அம்பிகை மற்றவர் களுடைய தகுதியையும் என்னுடைய அபக்குவத்தையும் பார்த்து என்னேத் தள்ளிவிடுவாளோ! என்ற ஐயப்பாடு உண்டாகிறது. பொல்லாத சேயெனில் தாய்தள்ளல் நீதமோ? என்று தாயுமானவர் கேட்கிருர். அன்னை மகா மாதா, அவளைப் புகல் அடையாதவர்களுக்கு அவளுடைய அருள் தாமதமாகக் கிடைக்கலாம். புகல் அடைந்த பிறகு அவள் தயைபுரிந்து பாதுகாப்பாள். புகல் புகுகின்றவரைக் குந்தான் வேறுபாடு. புகல் புகுந்த பிறகு ஏது வேற்றுமை? எல்லோரும் பக்தர்கள்; தாயின் குழந்தைகள்.
ரெயில் வண்டியில் ஏறுகின்றவர்கள் பல திசைகளி லிருந்தும் வருவார்கள்; நடந்து வருவார்கள்; வண்டியில் வருவார்கள். போகலாம் என்று எண்ணிப் பல நாள் தாமதம் செய்து பிறகு வரு வார்கள். ஜனதா எக்ஸ் பிரஸ்ளில் எல்லோரும் ஏறு கிருர்கள். எல்லோரும் டிக்கெட் வாங்கினவர்கள். நீ காரில் வந்தவன்; உனக்கு நான் அறுபது மைல் வேகத்தில் போகிறேன்’ என்று வண்டி சொல்லுமா? எல்லோருக்கும் ஒரே வேகம், ஒரே நிறை. டிக்கட் வாங்கி வண்டியில் ஏறிவிட்டால் பிறகு வேறுபாடு இல்லை. -
அம்பிகையைச் சரண்புகுவதற்கு முன் பல வேறு நிலைகள் இருந்திருக்கலாம். சரணம் புகுந்துவிட்டால்