பக்கம்:திருக்கோலம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தள்ளத் தகாது 199.

பக்தர்களுக்குள் வேற்றுமை இல்லை. டிக்கட் வாங்காமல் ஏறியவர்களைப்போல், உண்மையான பக்தி இல்லாமல் போலிவேடம் போடுகிறவர்களுக்குத்தான் ஆபத்து. மற்ற வர்கள் யாவரும் அன்னையின் அருளைப் பெறுவார்கள்,

இப்போது அபிராமிபட்டர் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிருர், அவர் பணிவுள்ளவர்; அகந்தை அழிந்தவர், தோயே, உன்னுடைய பக்தர்கள் மிகப் பெரியவர்கள். அவர் களுக்குமுன் நான் எம்மாத்திரம்? என்னே நீ கருணேயினலே. ஆட்கொள்ளவேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, இவன் தகுதி உடையவன் அல்லன் என்று தள்ளு தல் நியாயம் அன்று. நான் வேறு யாரை அடைவேன்? உன்னேவிடப் புகல்புகுவதற்கு வேறு யார் இருக்கிருர்கள்? நீயே பரதேவதை என்று உன்னே அடைந்துவிட்டேன். இதைமட்டும் எண்ணி ஆட்கொள்ளவேண்டும்: என்கிருர்,

என் பத்தருக்குள்

தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது.

('என்னுடைய சிறந்த பக்தருக்குள் இவன் அவர்களோடு சமானமாக வைத்து எண்ணத்தக்க தகுதி உடையவன் அல்லன் என்று நினைந்து அடியேனே நீ தள்ளில்ை, அச்செயல் நின் பெருமைக்கு ஏற்றதாகாது. தரம்-தகுதி, தள்ளநீை தள்ளில்ை.)

'உன்னையே சரணுக அடைந்து விட்டேன். இனிப் புகல் இடம் வேறு இல்லை. நீ தள்ளில்ை நான் சென்று சேரும் இடம் வேறு கிடையாது’ என்கிருர்,

பெரியவர்கள் தம்மை மற்றவர்களோடு ஒப்பு நோக்கி, "நாம் எவ்வளவு தாழ்வாக உள்ளோம்!” என்று எண்ணுவது இயல்பு, ஆலுைம் இறைவன் நம்மைக் கைவிடமாட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/119&oldid=578058" இலிருந்து மீள்விக்கப்பட்டது