பக்கம்:திருக்கோலம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரியம் அற்ற உறக்கம்

இவ்வுலக வாழ்க்கையில் ஈடுபட்டுப் பல வகையான செயல் செய்யும் ஒருவனுக்கு உலகத்திலுள்ள பொருள் களின் மேல் பற்று உண்டாகிறது. நாள் ஆக ஆக, அந்தப் பற்று விரிகிறது, அந்தப் பொருள்களோடு ஒட்டிக்கிடக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. அவற்றைப் பிரிய நேர்ந்தால் துன்பம் விளேகிறது. இவ்வாறு பற்றினைப் பெருக்கிக் கொண்டே போலதல்ை துன்பம் மிகுதி யாகிறதேயன்றிக் குறைவதில்லே.

எவ்வளவு நீண்ட காலம் ஒருவன் வாழ்ந்தாலும் கடைசியில் அவன் இவ்வுலக வாழ்வை விட்டு ஒருநாள் போக வேண்டியவன் தான். அப்படி நீங்கும்போது, பல பொருள்களின்மேல் பற்று உள்ளவனுக்கு உண்டாகும் துன்பம் அளவற்றதாகிறது. ஒர் ஊரில் உத்தியோகம் செய்கிறவன் வேறு ஒர் ஊருக்கு மாற்றலாகிப் போனல், அது அந்த உத்தியோக முறையென்று எண்ணி, அந்தப் புதிய ஊருக்குப் போகிருன்; இந்த ஊரை விட்டுப் போகிருேமே!’ என்று துன்பப்படுவதில்லை. அதுபோல இந்த வாழ்வை விட்டுப் பிரியும்பொழுது உண்மையை உணர்ந்தவர்கள் துன்பப்படமாட்டார்கள். இந்த உடம் பைப் பெற்ற தல்ை ஆன பயனைப் பெற்றவர்கள், இறைவி 'யின் திருவருளுக்கு ஆளானவர்கள், இந்த உடம்பை விட்டுப் போகிருேமே என்று கவலைப்படமாட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/121&oldid=578060" இலிருந்து மீள்விக்கப்பட்டது