பக்கம்:திருக்கோலம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருக்கோலம்

ஒர் ஊரில் இரண்டு பேர் கரும்புத் தோட்டம் போட் டார்கள். கரும்பு நன்ருக முற்றி விளேந்தது. அப்போது ஒருவன் வந்து தோட்டத்துக்குச் சொந்தக்காரர்களாகிய இருவரிடமும், 'உங்கள் கரும்புத் தோட்டங்கள் எரிகின் றன’’ என்ருன். அதைக் கேட்ட ஒருவர், அப்படியா? நல்ல காரியம்! நானே எரிக்க வேண்டும் என்று எண்ணி னேன். எனக்கு வேலே வைக்காமல் யாரோ ஒர் உபகாரி அதைச் செய்து விட்டார்’ என்று சொன்னர். மற்ற வரோ, ஐயோ! என் கரும்பு வீணாகிவிடுமே!’ என்று ஓடினர். காரணம் என்ன? முதல்வர் கரும்பை வெட்டி ஆலேயிற் பிழிந்து சாருக்கி வெல்லம் உண்டாக்கி விற்று விட்டவர். தோட்டத்தில் கரும்பு வெட்டிய தோகைதான் இருந்தது. அதற்குத் துரும்பு என்று பெயர். மற்ருெரு வரோ கரும்பை இன்னும் வெட்டாமல் இருந்தவர்; அதல்ை துன்புற்ருர். -

முதலில் உள்ளவரைப்போல, இந்தப் பிறவியில் செய்ய வேண்டியவற்றைச் செய்தவர்கள், மரணம் வருமென்று, அஞ்சமாட்டார்கள். இந்தக் க ரு த் ைத நாலடியார் - சொல்கிறது. - - கரும்பாட்டிக் கட்டி சிறுகாலேக் கொண்டார் .

துரும்புஎழுந்து வேங்கால் துயர்ஆண்டு உழவார்; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் காலன் வருங்கால் பரிவதிலர்.22

ஒர் ஊருக்குப் பயணம் புறப்பட எண்ணினர் ஒருவர். அங்கேயே குடியேறவும் தீர்மானித்து விட்டார். அதற்கு வேண்டிய பணத்தை ஈட்டி ஒரு முதலாளியிடம் கொடுத் திருக்கிரு.ர். எனக்குவேண்டிய பண்டங்களே இந்தப் பணத் தைக் கொண்டு வாங்கி வையுங்கள். நான் புறப்படும்போது உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன். அந்தச் சமயத் தில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்’ என்று சொல்லிக் கொடுக்கிருர். அவர் பயணம் புறப்படும்போது தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/122&oldid=578061" இலிருந்து மீள்விக்கப்பட்டது