பக்கம்:திருக்கோலம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரியம் அற்ற உறக்கம் 115

முதலில் அன்னையை விளிக்கிருர், அவள் தாமரையின் மேல் வீற்றிருக்கும் திருமகளாக இருக்கிருள். அன்றியும் ஆறு ஆதாரங்களாகிய கமலங்களில் வெவ்வேறு வடிவத்தில் எழுந்தருளியிருக்கிருள். இந்த நிலையை இவ்வாசிரியர் பல இடங்களில் எடுத்துச் சொல்லியிருக்கிருர்.

எஅம்புயமேல் திருந்திய சுந்தரி: (5) என்ருர் ஒரு பாட்டில், உறைகின்ற நின்திருக்கோயில்....கஞ்சமோ?? (20) என்று கேட்டிருக்கிருர். அருணும்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்’ (58) தகைமையை ஒரு பாட்டில் போற்றியிருக்கிருர், 'ஆ'ட க த், தாமரை ஆரணங்கே’’ (80) என்று அழைத்திருக்கிறர். ஆளியார், கமலத்தில் ஆரணங்கே’ (82) என்றும் விளித்திருக்கிருச்.

உடம்பில் உயிர் இருக்கும்போது ஆறு ஆதார கமலங் களில் எழுந்தருளியிருக்கும் தேவிக்கு அந்த உயிர் உடம்பை விட்டுப் போகும் நேரம் தெரியுமாகையால், தாயே, நீ சிறப்பான ஆதார கமலங்களில் இருப்பவள் ஆயிற்றே; உடம்போடு உயிர் உறவு அறும்போது நீ உடனே வந்து அருள் செய்யலாமே!’ என்று எண்ணி அந்த நிலையைக் குறித்து அம்பிகையை அழைக்கிருர்.

சிறக்கும் கமலத் திருவே!

‘என் உயிரும் உடம்பும் உறவற்றுப் போகும் சமயம் எனக்குத் தெரியாது. அந்தச் சம்யத்தில் வந்து கூப்பிடு, வருகிறேன்’ என்றல் அப்போது என் அறிவு மயங்கி நிற்கும். அப்போது உன்னை அழைக்க முடியாது. ஆகையால் உடம்போடு உயிர் ஒட்டிக் கிடக்கும் இந்தச் சமயத்தில், என் அறிவு தெளிவாக உள்ள இந்த நிலையில், என் விண்ணப்பத்தைச் சிடிர்ப்பித்துக் கொள்கிறேன். என்ற குறிப்போடு அம்பிகையிடம் வேண்டுகோன் விடுக்கிருர். . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/125&oldid=578064" இலிருந்து மீள்விக்கப்பட்டது