பக்கம்:திருக்கோலம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருக்கோலம்

நீே மாத்திரம் வந்தால் போதாது. நின் துணைவராகிய சிவபெருமானுடன் வந்து அநுக்கிரகம் பண்ண வேண்டும்? என்று பிரார்த்திருக்கிறர். ஒருவருக்கு இருவராக வந்தால் பாதுகாப்பு உறுதிப்படும் அல்லவா? இருவரும் வேறு அல்லர். ஆலுைம் சிவமும் சக்தியுமாக இருக்கிருர்கள், அவ்விருவருமே வந்தால் நிச்சயமாக நன்மை கிடைக்கும்,

நின் துணைவரும் நீயும்.வரல் வேண்டும். இவ்வாறு இறைவனும் அம்பிகையும் சேர்ந்து வந்து அருள் செய்யவேண்டும் என்று பல இடங்களில் இவ் வாசிரியர் சொல்கிறர். காமேசுவரனும் காமேசுவரியுமாக

என்றும் பிரியாது இணைந்திருப்பவர்களாதலின் அவர்களைப் பிரிக்காமல் இணையாகவே வர வேண்டுகிறர்.

புனிதரும் நீயும்என் புந்தினந் நாளும்

பொருந்துகவே?? (4) இறைவரும் நீயும்.வெளிநிற்கவே??(18) 'உமையும் உமையொரு பாகனும்

ஏக உருவில் வந்திங்கு எமையும் தமக்கன்பு செய்யவைத்தார்?? (31) 'ெபூங்குவளைக் கண்ணியும் செய்ய 莎

கணவரும் கூடி வந்து, (41)

அறிவு மறந்து உயிர் பிரியும் சமயத்தில் அம்பிகை தன் திருவடியை அவர் சென்னியில் வைக்க வேண்டுமாம். பிறகு சிவானந்த அநுபவமாகிய உறக்கத்தைத் தர வேண்டுமாம், அம்பிகை மோட்ச சாம்ராஜ்யத்தைத் தருகிறவள். துறக்கம் தருபவளாகிய நின் சேவடியைச் சென்னியில் வைக்க உன் 'துணைவருடன் எழுந்தருள வேண்டும்’ என்று வேண்டுகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/126&oldid=578065" இலிருந்து மீள்விக்கப்பட்டது