பக்கம்:திருக்கோலம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரியம் அற்ற உறக்கம் ... I 17

தின் சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும் நின் துணைவரும்

நீயும்.வரல் வேண்டும்.

முதலில் அம்பிகையின் திருவடி திட்சை பெற்றல் தெளிவு பிறக்கும்; பிறகு பேரானந்தப் பெருவாழ்வு உண்டாகும்; எல்லாம் மற ந்த நிலையை அடையலாம்.

அவஸ்தைகள் ஐந்து, இசக்கிரம், சுவப்னம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன அவை. நாம் மூன்று அவஸ்தைகளே அடைந்து வருகிருேம். விழிப்புடன் இருக்கும் நில ஜாக்கிரம்; உறங்கும்போது கனவு உண்டாகும் கிலே சுவப்னம்; விழித்த நிலையில் உடம்பும் மனமும் தொழிற்படும்; கனவு நிலையில் உடம்பு தொழிற்படாது; உள்ளம்மட்டும தொழிற்படும். மனமும் தொழிற்படாமல் உள்ளது மூன்றுவது அவஸ்தையாகிய சுஷாப்தி; அதைச் கழுத்தி என்று தமிழ்ப்படுத்திச் சொல்வது வழக்கம். நாலாவது அவஸ்தைக்குத் துரியம் என்று பெயர், அது மயக்கம் போன்ற நிலை. அதற்கும் அப்பாற்ப்ட்டது துரியாதீதம். . . . -

இந்த அவஸ்தைகளில் உயர்ந்த நிலைகள் உண்டு; தாழ்ந்த நிலைகளும் உண்டு,சுத்தாவஸ்தை, அசுத்தாவஸ்தை என்று அவற்றைச் சொல்வார்கள். இறைவனிடம் ஈடு பட்டுத் தியானம் புரிந்து பயிற்சி பண்ணுகிறவர்கள் சுத்தாவஸ்தைகளை அடைவார்கள். நாம் இயற்கையாக அடைகின்ற அவஸ்தைகள் அசுத்த அவஸ்தைகள்.

அம்பிகையின் அருள் கிடைத்தால் எல்லாவற்றுக்கும் மேலானதும் எல்லாம் ஒழிந்ததும் ஆகிய துரியாதீத நில கிடைக்கும். அது, எல்லாம் மறந்து நீடிக்கும் உறக்கம் போன்றது. நிர்விகல்ப சமாதிநிலேயே சுந்தாவஸ்தையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/127&oldid=578066" இலிருந்து மீள்விக்கப்பட்டது